கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்துள்ள கிராமத்தை சேர்ந்த பரசுராமன் (49) என்பவர் தனது தோட்டத்தில் முந்திரி விளைச்சல் செய்து வியாபாரம் நடத்தி வரும் நிலையில் இவருடைய தோட்டத்திலிருந்து முந்திரி கொட்டைகளை எடுத்துச் செல்வதற்கு சிரமமாக இருந்துள்ளது. எனவே சுலபமாக எடுத்துச் செல்வதற்கு தன்னுடைய உறவினரான இளங்கோவன் இடத்தில் சாலையை சீரமைத்துள்ளார். ஆனால் அதற்கு இளங்கோவன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால் இளங்கோவன் மற்றும் பரசுராமன் இருவருக்கும் இடையே நில பிரச்சனை காரணமாக அடிக்கடி வாக்குவாதம் வந்துள்ளது. இளங்கோவன் பரசுராமன் சீரமைத்த சாலையை பயன்படுத்த விடாமல் தடுத்து நிறுத்தியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த பரசுராமன் தனது அண்ணனை தகாத வார்த்தைகளால் திட்டி வாக்குவாதம் செய்துள்ளார். இதனால் இருவரும் மாறி மாறி அடித்துக் கொண்டு சண்டை போட்டுள்ளனர். இவர்களுடைய சத்தம் கேட்டு பக்கத்து வீட்டில் வசித்து வந்த அறுபது வயதுடைய மணிமேகலை அவர்களது வீட்டுக்குச் சென்றுள்ளார். அப்போது பரசுராமனுக்கும் இளங்கோவனுக்கும் மோதல் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிக் கொண்டதை பார்த்த மணிமேகலை இருவரையும் சமாதானம் செய்ய முயற்சித்த போது எதிர்பாராத விதமாக கீழே தவறி விழுந்துள்ளார்.
இதில் மயக்கம் அடைந்த மணிமேகலையை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். உடனே தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த மணிமேகலைக்கு சிவகுமார் என்பவருடன் திருமணம் ஆகிய இரண்டு மகன்களுடன் வசித்து வந்துள்ளார். சண்டையின்போது பெண் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…
உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…
தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…
கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…
உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…
உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…