“பானிபூரி பிரியர்களே உஷார்!… ஆசை ஆசையாய் சாப்பிட்ட பானிபூரி.. இறுதியாக காத்திருந்த அதிர்ச்சி… 18 குழந்தைகள் உயிருக்கு ஆபத்து… ஜார்கண்டில் சோக சம்பவம்…!!!

By Muthu Mani on சித்திரை 27, 2026

Spread the love

ஜார்க்கண்ட் மாநிலம் கிரிடிஹ் மாவட்டத்தில் உள்ள பஜ்டோ கிராமத்தில், சாலையோரக் கடையில் பானிபூரி சாப்பிட்ட 18 குழந்தைகள் உட்பட 20 பேர் கடுமையான உடல்நலக் குறைபாட்டிற்கு ஆளான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அசுத்தமான உணவை உட்கொண்ட சிறிது நேரத்திலேயே அவர்களுக்கு வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த துயரமான நிகழ்வில் ஒரு குழந்தை பரிதாபமாக உயிரிழந்ததை மாவட்ட துணை ஆணையர் ராம்நிவாஸ் யாதவ் உறுதிப்படுத்தியுள்ளார்.

பாதிக்கப்பட்ட மற்ற குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள துணை ஆணையர், உணவு மாதிரிகளை ஆய்வு செய்ய அறிவுறுத்தியுள்ளார். கோடை காலங்களில் சாலையோர உணவுகளை உட்கொள்ளும் போது பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும், சுகாதாரமற்ற உணவுகள் உயிருக்கே ஆபத்தாக முடியலாம் என்றும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.