பன்னீர் அதிகமா சாப்பிட்டால் உடலில் இவ்வளவு ஆபத்துக்கள் வருமா?… இனி யாரும் இப்படி சாப்பிடாதீங்க…!

By Nanthini on புரட்டாதி 21, 2025

Spread the love

நாம் தினந்தோறும் சாப்பிடக்கூடிய உணவுகளில் சில உடல் நலத்திற்கு நன்மை தரக்கூடியதாக இருந்தாலும் அதுவே அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் பக்க விளைவுகளை ஏற்படுத்தி விடும். அப்படிதான் பன்னீர் சைவ உணவு பெரியவர்களுக்கு விருப்பமான உணவாக கருதப்படுகிறது. ஆனால் அதனை அளவுக்கு மீறி சாப்பிடும் போது சில பக்க விளைவுகள் ஏற்படும். அதன் நன்மைகளோடு கூட வரும் சிக்கல்களையும் தெரிந்து கொள்ள முடியும். பன்னீர் புரதம் மற்றும் கால்சியம் நிறைந்த பால் பொருளாக கருதப்படுகிறது. இது எலும்புகள் மற்றும் தசைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். உடலுக்கு ஆற்றலை வழங்கும்.

அதேசமயம் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவதோடு இதை ஆரோக்கியத்திற்கும் பயனுள்ளதாக இருக்கும். பன்னீரில் கலோரி மற்றும் கொழுப்பு குறைவாக இருந்தாலும் அதிகமாக சாப்பிட்டால் கலோரி அளவு அதிகரித்து எடை அதிகரிக்கும் அபாயம் ஏற்படும். பன்னீரில் கொழுப்பு மற்றும் உப்பு அதிகமாக இருப்பதால் அதை அதிகமாக சாப்பிடுவது உயர் ரத்த அழுத்தம் மற்றும் இருதய நோய் அபாயத்தை அதிகரிக்கும். பன்னீரில் இருக்கக்கூடிய கால்சியம் எலும்பு ஆரோக்கியத்திற்கு நன்மை தரும்.

   

இருந்தாலும் அதிகப்படியான கால்சியம் எடுத்துக் கொள்வதால் சிறுநீரக கற்கள் உருவாகும் அபாயமும் உண்டு. பன்னீர் அளவோடு சாப்பிடும் போது எந்த ஒரு பக்க விளைவுகளும் ஏற்படாது. காய்கறிகள், பழங்கள், தானியங்கள் மற்றும் மெலிந்த புரதங்கள் ஆகியவற்றை உணவுகளுடன் சேர்த்து பன்னீரை சாப்பிட்டால் உடல்நலம் பாதுகாக்கப்படும். ஆகவே பன்னீரை முழுமையாக தவிர்க்க வேண்டிய அவசியம் இல்லை. அதுவே அளவோடு எடுத்துக் கொள்வது ஆரோக்கியத்திற்கு நல்லது.