விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹிட் சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ் .இந்த சீரியலில் அண்ணன் தம்பி குடும்ப ஒற்றுமை பற்றி விரிவாக எடுத்துக் கூறுவதால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. மேலும் இந்த சீரியல் அன்பு, பாசம், ஒற்றுமை ,கோபம் ,வெறுப்பு, துரோகம் என அனைத்தையும் ஒருங்கே காட்டி வருகிறது.
ஒரு கூட்டுக் குடும்பத்தில் நடக்கும் அனைத்து பிரச்சனைகளையும் வெளிச்சம் போட்டு காட்டி வந்தது. சமீபத்தில் சீரியல் இறுதி நாள் ஷூட்டிங்கில் ஒட்டுமொத்த சீரியல் குழுவினரும் இணைந்து கேக் வெட்டி, கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி படுவைரலானது. இதைத்தொடர்ந்து பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் இரண்டாவது சீசன் விரைவில் வரும் என்றும் தகவல்கள் வெளியானது.
இதைத்தொடர்ந்து ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலுக்கான ப்ரோமோவும் வெளிவந்தது. அதில் ‘ ஸ்டாலின் முத்து அப்பாவாகவும் அவரின் மனைவியாக நிரோஷாவும் நடிக்க உள்ளனர். அவர்களுக்கு மூன்று மகன்கள் மற்றும் மகள்கள் உள்ளனர். தொடர்ந்து விஜய் டிவி இந்த சீரியலுக்கான ப்ரோமோவை வெளியிட்டு வருகிறது.
அந்தவகையில் தற்பொழுது அப்பாவின் சொல் பேச்சை தட்டாத மகன்கள், இதைப்பார்க்கும் ஊர்க்காரர்கள்’ மருமகள்கள் வீட்டுக்கு வந்தால் தான் தெரியும்’ என கூற, ‘அப்பவும் என் புள்ளைங்க என் பேச்சை தான் கேப்பாங்க’ என ஸ்டாலின் கூற இந்த ப்ரோமோ நிறைவடைந்துள்ளது. மேலும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் வரும் 30 ஆம் தேதி தொடங்க உள்ளதாகவும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதோ அந்த ப்ரோமோ வீடியோ…