#image_title
விஜய் டிவியில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர் சீரியல் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தவர் குமரன் தங்கராஜன். இவர் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் கதிர் கதாபாத்திரத்தில் நடித்தார். முதலில் ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியில் பின்னணி நடன கலைஞராக வேலை பார்த்தார்.
அதன் பிறகு உங்களில் யார் அடுத்த பிரபுதேவா நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார். கடந்த 2015 ஆம் ஆண்டு விக்ரம் பிரபு கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ரிலீசான இது என்ன மாயம் திரைப்படத்தின் மூலம் சினிமாவில் தனது பயணத்தை ஆரம்பித்தார். குமரன் தங்கராஜன் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் நடித்து பிரபலமானார்.
இந்த நிலையில் குமரன் தங்கராஜன் ஒரு திரைப்படத்தில் நடிக்க உள்ளார். அந்த திரைப்படத்தை லக்கி மேன் படத்தை இயக்கிய பாலாஜி வேணுகோபால் இயக்க உள்ளார். லக்கி மேன் திரைப்படத்தின் மூலம் பாலாஜி வேணுகோபால் திரையுலகில் இயக்குனராக தனது பயணத்தை ஆரம்பித்தார்.
அந்த படத்தில் யோகி பாபு, வீரா, ரேய்ச்சல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர். நகைச்சுவை மற்றும் எமோஷன் திரைக்கதையில் அந்த படம் உருவானது. இப்போது குமரன் தங்கராஜை வைத்து வேணுகோபால் இயக்க உள்ள படம் குறித்த கூடுதல் தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள ஹர்னியா கேடி கிராமத்தில், ஒரு பெண் அவரது குடும்பத்தினரால் கொடூரமாக தாக்கப்பட்டு,…
தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசு நிர்ணயித்த வழிகாட்டுதலின்படி மட்டுமே கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என்று நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை…
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில், பணத் தகராறு காரணமாக ஸ்பா உரிமையாளர் ஒருவர் கடத்தப்பட்டு, ஹோட்டல் அறை ஒன்றில் வைத்து…
முட்டை சைவ உணவா அல்லது அசைவ உணவா என்ற விவாதம் பல ஆண்டுகளாக நம்மிடையே தொடர்ந்து வருகிறது. பொதுவாக, முட்டை…
மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள எஸ்.ஆர்.ஏ அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீரென ஒரு பெரும் தீ விபத்து ஏற்பட்டது.…
திரைத்துறையிலிருந்து வந்து தமிழ்நாட்டை ஆளும் நான்காவது நபர் என்ற பெருமையுடன், தற்போது தமிழக முதலமைச்சராக விஜய் செயல்பட்டு வருகிறார். ஆரம்பத்தில்…