Categories: சினிமா

ரஜினிகாந்துக்கு பிச்சை போட்ட பெண்… கடவுள் திருவிளையாடல் என கண் கலங்கிய சூப்பர்ஸ்டார்…

Spread the love

தென்னிந்தியாவின் மிகப் புகழ்பெற்ற நடிகரும் இந்தியாவின் முக்கியமான பிரபலமாகவும் இருப்பவர்தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கும் மேலாக இன்றளவும் 75 வயதை கடந்த பின்னரும் சினிமாவின் மீது அதிக பற்று கொண்டு நடித்துக் கொண்டே இருப்பவர் ரஜினிகாந்த். சூப்பர் ஸ்டார் என்ற பெயரை இவருக்கு மக்களே வழங்கினர். அந்த அளவுக்கு தனது நடிப்பினாலும் ஸ்டைலினாலும் மக்களை கவர்ந்தவர் ரஜினிகாந்த்.

ஆரம்பத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருந்த ரஜினிகாந்த் ஒரு கட்டத்திற்கு பிறகு நாயகனாக நடிக்க ஆரம்பித்தார். இவர் முடி கோதும் ஸ்டைலும் சிகரட்டை தூக்கி போட்டு வாயில் பிடிக்கும் ஸ்டைலும் மிகப் பிரபலமாக மாறியது. அடுத்தடுத்து இவர் நடித்த படங்கள் அனைத்தும் ஹிட்டானது.

அவருக்கு அடுத்த தலைமுறை நடிகர்களாக இருந்த விஜய் அஜித் பிரபு சத்யராஜ் உள்ளிட்ட அனைவரும் ரஜினிகாந்த் அவர்களை முன்னுதாரமாக வைத்திருப்பர். அதேபோல் ரஜினிகாந்த் அவர்கள் சிறந்த ஆன்மீகவாதியும் ஆவார். இவரது மேடைப் பேச்சுகளும் மக்களால் பெருகுவாக விரும்பி பார்க்கக் கூடிய ஒன்றாகும்.

அப்படியே ரஜினிகாந்த் எந்த படத்திற்கான சூட்டிங் சென்றாலும் அங்குள்ள கோயில்களை தரிசிக்கும் வழக்கத்தை கொண்டிருப்பவர். அப்படி சிவாஜி படத்துக்காக சூட்டிங் பெங்களூருக்கு சென்றிருக்கும்போது தனது நண்பரிடம் வாங்க நம்ம கோயிலுக்கு போய் சாமி கும்பிட்டு வரலாம் என்று கூறியிருக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அப்போது அவரது நண்பர் ஐயோ நீங்க கோயிலுக்கு வந்தா அங்க ரொம்ப கூட்டம் கூடி விடும் என்ன பண்றது என்று கூறியிருக்கிறார். அதற்கு ரஜினிகாந்த் நான் சாதாரண மனிதன் போல கசங்கிய வேட்டி சட்டை துண்டு போட்டுக்கொண்டு வருகிறேன் போயிட்டு வந்தரலாம் அப்படின்னு கோவிலுக்கு இருவரும் சென்று இருக்கின்றனர்.

அப்போது சாமி தரிசித்துவிட்ட பின்பு கோயில் பிரகாரத்தில் உட்கார்ந்து இருந்திருக்கிறார் ரஜினிகாந்த். மிகவும் கசங்கிய ஆடையில் இருந்ததால் அவர் யாசகம் பெற தான் உட்கார்ந்து இருக்கிறார் என்று நினைத்து குஜராத்தை சேர்ந்த ஒரு பெண்மணி அவருக்கு 10 ரூபாயை பிச்சை போட்டு இருக்கிறார். ஒன்றும் சொல்லாமல் அதை வாங்கி இருக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். பின்னர் கோவில் உண்டியலில் 100 ரூபாய் போட்டார். அதைப் பார்த்து அந்த பெண்மணி ரஜினி அவர்களிடம் அருகே வந்து அவரை நன்றாக பார்த்தபின் நீங்க ரஜினிகாந்த் தானே நான் தெரியாமல் இப்படி பண்ணிட்டேன் அப்படின்னு சொல்லி இருக்கிறார் அந்த பெண்மணி.

உடனே ரஜினிகாந்த் அவர்கள் பெருந்தன்மையாக இல்லம்மா இதுல உங்க தப்பு எதுவுமே இல்ல இது அந்த கடவுள் நிகழ்த்திய திருவிளையாடல். என்னுடைய புத்திக்கும் எட்டுவதற்காக இந்த மாதிரி செய்து இருக்கிறார் என்று கூறியிருக்கிறார். அந்த பத்து ரூபாய் நோட்டை திருப்பி கேட்ட பெண்மணியிடம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இல்லை இது ஞாபகமா என்னிடமே இருக்கட்டும் என்று கூறி இருக்கிறார். உடனே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது நண்பரிடம் நான் இன்று இருக்கும் இந்த வாழ்க்கை கடவுள் போட்ட பிச்சை என்று எனக்கு உணர்த்துவதற்காகவே இப்படி செய்திருக்கிறார் என்று கண்கலங்கி கூறியிருக்கிறார் ரஜினிகாந்த்.

admin

Recent Posts

“ச்சீ… மனித மிருகங்களின் வெறியாட்டம்… பெண்ணை நிர்வாணமாக்கி… செருப்பு மாலை அணிவித்து… நடுத்தெருவில் ஊர்வலம்… ம.பி- யில் நடந்த கொடூரம்…!!”

மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள ஹர்னியா கேடி கிராமத்தில், ஒரு பெண் அவரது குடும்பத்தினரால் கொடூரமாக தாக்கப்பட்டு,…

6 மணத்தியாலங்கள் ago

“இதோடு சரி, இனிமே ஆட்டம் செல்லாது!”… தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு அமைச்சர் வைத்த ‘செக்’… களமிறங்கும் அதிரடிப் படை…!

தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசு நிர்ணயித்த வழிகாட்டுதலின்படி மட்டுமே கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என்று நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை…

6 மணத்தியாலங்கள் ago

“கதற கதற பெல்ட் அடி..!” ஹோட்டல் அறையில் உரிமையாளர் கொடூர கடத்தல்… மத்தியப் பிரதேசத்தில் அரங்கேறிய அதிர்ச்சி வீடியோ…!!

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில், பணத் தகராறு காரணமாக ஸ்பா உரிமையாளர் ஒருவர் கடத்தப்பட்டு, ஹோட்டல் அறை ஒன்றில் வைத்து…

6 மணத்தியாலங்கள் ago

முட்டை சைவமா? அசைவமா?… பல ஆண்டு கால விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த அறிவியல்… இதோ யாரும் யோசிக்காத லாஜிக்…!

முட்டை சைவ உணவா அல்லது அசைவ உணவா என்ற விவாதம் பல ஆண்டுகளாக நம்மிடையே தொடர்ந்து வருகிறது. பொதுவாக, முட்டை…

6 மணத்தியாலங்கள் ago

அதிர்ச்சி… அடுக்குமாடியில் பயங்கர தீ விபத்து… அலறிய மக்கள்… தப்பிக்க மாடியிலிருந்து கீழே குதித்த கோரக் காட்சி…!!

மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள எஸ்.ஆர்.ஏ அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீரென ஒரு பெரும் தீ விபத்து ஏற்பட்டது.…

6 மணத்தியாலங்கள் ago

“அட நம்ம தளபதியா இது?”… மாறுவேடத்தில் பைக் ரைடு சென்ற CM விஜய்..? இணையத்தை கலக்கும் சுவாரசிய பின்னணி…!!

திரைத்துறையிலிருந்து வந்து தமிழ்நாட்டை ஆளும் நான்காவது நபர் என்ற பெருமையுடன், தற்போது தமிழக முதலமைச்சராக விஜய் செயல்பட்டு வருகிறார். ஆரம்பத்தில்…

6 மணத்தியாலங்கள் ago