விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹிட் சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ் .இந்த சீரியலில் அண்ணன் தம்பி குடும்ப ஒற்றுமை பற்றி விரிவாக எடுத்துக் கூறுவதால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. மேலும் இந்த சீரியல் அன்பு, பாசம், ஒற்றுமை ,கோபம் ,வெறுப்பு, துரோகம் என அனைத்தையும் ஒருங்கே காட்டி வருகிறது.
ஒரு கூட்டுக் குடும்பத்தில் நடக்கும் அனைத்து பிரச்சனைகளையும் வெளிச்சம் போட்டு காட்டி வந்தது. சமீபத்தில் சீரியல் இறுதி நாள் ஷூட்டிங்கில் ஒட்டுமொத்த சீரியல் குழுவினரும் இணைந்து கேக் வெட்டி, கொண்டாடி புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்து இருந்தனர். இப்புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி படுவைரலானது. இதைத்தொடர்ந்து பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் இரண்டாவது சீசன் விரைவில் வரும் என்றும் தகவல்கள் வெளியானது.
இதைத்தொடர்ந்து ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலுக்கான ப்ரோமோவும் வெளிவந்தது. அதில் ‘ ஸ்டாலின் முத்து அப்பாவாகவும் அவரின் மனைவியாக நிரோஷாவும் நடிக்க உள்ளனர். அவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். தன் பிள்ளைகளுக்கு தலையில் எண்ணெய் வைத்து தேய்த்து விட்டு குளிக்க வைக்கிறார் ஸ்டாலின். மேலும் அவர் ‘பிள்ளைகளை வளர்த்தா என்னைப் போல வளர்க்கணும்’ என்கிறார்.
இதைப்பார்க்கும் பொழுது அப்பாவுக்கும் மூன்று மகன்களுக்கும் இடையே நடக்கும் கதையை மையமாக வைத்து பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 ஒளிபரப்பாக உள்ளது போல தெரிகிறது. எப்படியோ அப்பா – மகன் பாசத்தை வைத்து புது உருட்டு உருட்ட போகும் விஜய் டிவியின் இந்த உருட்டு ரசிகர்களிடம் பலிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். இதோ அந்த ப்ரோமோ வீடியோ…
மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள ஹர்னியா கேடி கிராமத்தில், ஒரு பெண் அவரது குடும்பத்தினரால் கொடூரமாக தாக்கப்பட்டு,…
தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசு நிர்ணயித்த வழிகாட்டுதலின்படி மட்டுமே கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என்று நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை…
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில், பணத் தகராறு காரணமாக ஸ்பா உரிமையாளர் ஒருவர் கடத்தப்பட்டு, ஹோட்டல் அறை ஒன்றில் வைத்து…
முட்டை சைவ உணவா அல்லது அசைவ உணவா என்ற விவாதம் பல ஆண்டுகளாக நம்மிடையே தொடர்ந்து வருகிறது. பொதுவாக, முட்டை…
மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள எஸ்.ஆர்.ஏ அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீரென ஒரு பெரும் தீ விபத்து ஏற்பட்டது.…
திரைத்துறையிலிருந்து வந்து தமிழ்நாட்டை ஆளும் நான்காவது நபர் என்ற பெருமையுடன், தற்போது தமிழக முதலமைச்சராக விஜய் செயல்பட்டு வருகிறார். ஆரம்பத்தில்…