கடந்த 2006-ஆம் ஆண்டு ஆர்யா நடிப்பில் வெளியான கலாப காதலன் திரைப்படத்தின் மூலமாக சினிமாவுக்கு கலை இயக்குனராக அறிமுகமானவர் மிலன். இதனையடுத்து மிலன் பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளார். நடிகர் அஜித் நடிக்கவிருக்கும் விடாமுயற்சி படத்தை பிரபல இயக்குனர் மகில் திருமேனி இயக்குகிறார்.
இந்நிலையில் அர்பைஜான் நாட்டில் ஆக்சன் காட்சிகளுடன் விடாமுயற்சி படபிடிப்பு தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து த்ரிஷா, ஹுமா குரேஷி, அர்ஜுன், சஞ்சய் தத் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிக்கின்றனர்.
இந்நிலையில் படபிடிப்பிற்காக அஜித் உள்பட பட குழுவினர் வெளிநாட்டிற்கு சென்றுள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த படம் குறித்த தலைப்பு மட்டுமே வெளியானது. அதன் பிறகு படம் குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை. இதனால் அஜித் ரசிகர்கள் சோகத்தில் இருந்தனர். இந்நிலையில் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு விடாமுயற்சி படத்தின் படபிடிப்பு தொடங்கியது.
இந்நிலையில் விடாமுயற்சி படபிடிப்புக்காக ஹோட்டல் அருகில் தயாராகி கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக மிலனுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக படக்குழுவினர் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி மிலன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் விடாமுயற்சி பட குழுவினரும் திரை பிரபலங்களும் அதிர்ச்சியில் உள்ளனர். மிலன் பாதியில் விட்ட பணிகளை அவரது மகன் மேற்கொள்ள முடிவு செய்துள்ளார்.
மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள ஹர்னியா கேடி கிராமத்தில், ஒரு பெண் அவரது குடும்பத்தினரால் கொடூரமாக தாக்கப்பட்டு,…
தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசு நிர்ணயித்த வழிகாட்டுதலின்படி மட்டுமே கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என்று நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை…
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில், பணத் தகராறு காரணமாக ஸ்பா உரிமையாளர் ஒருவர் கடத்தப்பட்டு, ஹோட்டல் அறை ஒன்றில் வைத்து…
முட்டை சைவ உணவா அல்லது அசைவ உணவா என்ற விவாதம் பல ஆண்டுகளாக நம்மிடையே தொடர்ந்து வருகிறது. பொதுவாக, முட்டை…
மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள எஸ்.ஆர்.ஏ அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீரென ஒரு பெரும் தீ விபத்து ஏற்பட்டது.…
திரைத்துறையிலிருந்து வந்து தமிழ்நாட்டை ஆளும் நான்காவது நபர் என்ற பெருமையுடன், தற்போது தமிழக முதலமைச்சராக விஜய் செயல்பட்டு வருகிறார். ஆரம்பத்தில்…