தனது இசையால் பலரையும் கட்டி போட்டவன் தான் இசைஞானி இளையராஜா. இவருடைய இசைக்கி மயங்காதவர்கள் யாருமே கிடையாது என்று தான் சொல்ல வேண்டும். அன்னக்கிளி திரைப்படம் மூலமாக அறிமுகமான இளையராஜா இன்னும் இசையின் மூலமாக ராஜாங்கம் நடந்ததி கொண்டிருக்கிறார். இவரின் முதல் படத்திலிருந்து இவருடைய பாடல்கள் சரித்திரமாக தொடங்கி விட்டது. அன்னக்கிளி உன்னைத் தேடுதே என்ற பாடலின் ஹம்மிங் மனதிற்குள் புகுந்து மனதை கரைத்து விடும்.
இப்படி அடுத்தடுத்த படத்திற்கு இசையமைத்து அனைவரையும் கட்டுப்போட்ட இளையராஜா இதுவரை 1500 க்கும் அதிகமான படங்களுக்கு இசையமைத்துள்ளார். ஏராளமான மேடை நிகழ்ச்சிகளையும் அரங்கேற்றியுள்ள இளையராஜா பத்தாயிரத்திற்கும் அதிகமான பாடல்களை உருவாக்கியுள்ளார். சமீபத்தில் கூட லண்டனில் தனது முதல் சிம்போனியை இளையராஜா அரங்கேற்று இருந்தார்
. இப்படியான நிலையில் இளையராஜாவை சினிமாவிற்கு அறிமுகப்படுத்திய தயாரிப்பாளரும் இயக்குனருமான பஞ்சு அருணாசலம் இளையராஜா குறித்து ஒரு மேடையில் பேசும்போது, இளையராஜா அறிமுகமான அன்னக்கிளி திரைப்படத்தின் விழா மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெற்றது. முதல் படத்தின் வெற்றி விழாவுக்கு 1000 மேற்பட்ட கிராமங்களில் இருந்து மக்கள் வந்திருந்தனர். அந்த காலகட்டத்தில் மாட்டு வண்டி தான் இருந்ததால் மைதானத்தை சுற்றி சுமார் 10,000 மாட்டு வண்டிகள் நின்று கொண்டிருந்தது.
ராஜாவின் இசையை ரசித்து அவருடைய பாடல்களை கேட்பதற்காக மக்கள் அனைவரும் குடும்பம் குடும்பமாக வந்திருந்தனர். அப்போது கச்சேரி ஆரம்பித்து நான்கு பாட்டு பாடி முடிப்பதற்குள் பயங்கரமான மழை வந்துவிட்டது. கொட்டும் மழையிலும் மக்கள் யாருமே அந்த இடத்தை விட்டு நகராமல் நீங்க பாடுங்க என்று இளையராஜாவை நோக்கி கத்தினர். அந்தக் கொட்டும் மழையில் கிட்டத்தட்ட 3:30 மணி நேரம் இளையராஜா கச்சேரி செய்தார். அந்த இசை மழை 40 வருடமாக கொட்டிக் கொண்டிருக்கிறது. இன்னும் பல வருடங்களுக்கு இந்த இசை மழை கொட்டும் என்று பஞ்சு அருணாச்சலம் இளையராஜாவை புகழ்ந்து பேசி உள்ளார்.
தமிழ்நாடு அரசு விளையாட்டுத் துறையையும், சர்வதேச அரங்கில் பதக்கங்களை வெல்லும் விளையாட்டு வீரர்களையும் ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு சிறப்புத் திட்டங்களைச்…
திரைப்பட இயக்குநரும் நடிகருமான மிஷ்கின், 'டோரதி' என்ற திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு வழக்கம்போல தனது அதிரடி கருத்துகளால்…
தமிழக சட்டமன்றத்தில் தவெக அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவரப்படலாம் என்ற சூழல் எழுந்துள்ள நிலையில், கம்யூனிஸ்ட் கட்சிகளின்…
பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னரான முத்துக்குமரன் மீது வஹிதா என்ற பெண் உடல் ரீதியான தொடர்பு…
திருவைகுண்டம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் கு. சரவணன் மீது நிதி மோசடி உள்ளிட்ட கடுமையான புகார்கள் கிளம்பியுள்ள நிலையில், இது…
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் நாகோல் பகுதியில் உள்ள 100 அடி சாலை அருகேயுள்ள பாழடைந்த இடத்தில், 9 நாட்களாகக் காணாமல்…