Categories: சினிமா

20 வருடங்களுக்கு முன் சந்தித்த பெண்மணிக்கு எம்ஜிஆர் செய்த மிகப்பெரிய உதவி.. பலரையும் நெகிழ வைக்கும் சம்பவம்..!

Spread the love

தமிழ் சினிமாவில் நடிகர், தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் என்று பன்முக திறமை கொண்ட கலைஞராக வலம் வந்தவர் தான் எம்ஜிஆர். இவர் அரசியலிலும் கலக்கினார். முதலில் திராவிட முன்னேற்றக் கழகத்தில் தான் எம்ஜிஆர் இருந்தார். கடவுள் மறுப்பு கொள்கை கொண்ட இந்த கட்சியில் இருந்து கொண்டு மூகாம்பிகை கோவிலுக்கு சென்றது, மருதமலை கோவிலுக்கு சென்றது என்று எம்ஜிஆர் கட்சியில் சில சலசலப்புகளை சந்தித்து இருந்தாலும் படப்பிடிப்பில் சக நடிகையின் மூலமாக ஒரு சம்பவத்தை எதிர்கொண்டார். நாடக நடிகரான எம்ஜிஆர் 1936 ஆம் ஆண்டு சதிலீலாவதி என்ற திரைப்படம் மூலமாக தான் துணை நடிகராக சினிமாவில் நுழைந்தார்.

அதன்பிறகு தொடர்ந்து பல படங்களில் துணை நடிகர்கள் மற்றும் இரண்டாவது நாயகன் என அழைத்து வந்த எம்ஜிஆர் 10 ஆண்டு இடைவேளைக்கு பிறகு 1947 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானார். முதல் படத்தில் இவருடன் நடிக்க முடியாது என்ற சில நடிகைகள் மறுத்த சம்பவமும் பல நடந்து உள்ளது. பல தடைகளை கடந்து தொடர்ந்து தமிழ் சினிமாவில் ஒரு ஹீரோவாக தன்னை நிலை நிறுத்திக் கொண்ட எம்ஜிஆர் இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் தனக்கு என்று தனிமுத்திரையை பதித்தார். இவர் முதல் படமான நாடோடி மன்னன் என்ற படத்தை இயக்கி தயாரித்த நிலையில் பெரிய வெற்றியை பெற்று தந்தது. அடுத்தடுத்து பல வெற்றிகளை கொடுத்த எம்ஜிஆர் தன்னுடைய படங்கள் தொடர்பான முடிவை தானே எடுக்கும் நிலைக்கு உயர்ந்தார்.

இப்படி இருக்க எம்ஜிஆர் வாரி வழங்கும் வள்ளல் குணம் கொண்டவராகவும் திகழ்ந்தார். இப்படியான நிலையில் நாகர்கோவிலில் இருந்து ரசிகர்கள் ஒரு பேருந்தில் எம்.ஜி.ஆரை சந்திப்பதற்கு சென்னைக்கு வந்துள்ளனர். அவர்கள் அனைவரும் ராமாவரம் தோட்டத்தில் எம்ஜிஆர் ஐ சந்தித்தனர். அவர்கள் அனைவருக்கும் சுட சுட இட்லியும் கருவாட்டு குழம்பும் பரிமாறப்பட்டது. அதன் பிறகு அங்கிருந்தவர்களிடம் எம்ஜிஆர் பேசிக் கொண்டிருந்த போது ஒரு முதியவரிடம் திருநெல்வேலியில் இருக்கும் ஒரு ஊரை சொல்லி அங்கு இருக்கும் ஒரு பெண்மணியின் பெயரைச் சொல்லி விசாரிக்கிறார். அப்போது அந்த பெரியவர் அந்த அம்மாவுக்கு வயது தளர்ந்து விட்டது. உடம்பு சரியில்லாமல் சரியான கவனிப்பு இல்லாமல் இருக்காங்க என்று அந்த முதியவர் கூறிவிட்டு அவரை எப்படி உங்களுக்கு தெரியும் என்று எம்ஜிஆரிடம் விசாரித்தார்.

அதற்கு எம்ஜிஆர் இருபது வருடங்களுக்கு முன்பு நான் அந்த ஊர் வழியாக சென்று கொண்டிருந்தபோது எங்கள் கார் இரவு நேரத்தில் பஞ்சராகி நின்று விட்டது. உதவிக்கு யாரும் இல்லாமல் அன்று இரவு அந்த அம்மாவின் குடிசையில் தான் தங்கினோம். அப்போது பானையில் இருந்த பழைய சோறை ஊற்றி கருவாட்டை சாப்பிடுவதற்கு சுட்டுக் கொடுத்தார். அந்த தாயை என்றும் என்னால் மறக்க முடியாது என்று கூறிவிட்டு எம்ஜிஆர் ஒரு பணக்கட்டை எடுத்து அந்த முதியவரிடம் கொடுத்து அந்த அம்மாவிடம் உங்கள் மகன் கொடுத்தான் என்று சொல்லி இதை கொடுத்துவிட்டு உடம்பை பார்த்துக் கொள்ள சொல்லுங்கள் என்று கூறியுள்ளார். 20 வருடங்களுக்கு முன்பு தனக்கு உதவி செய்த தாயை ஞாபகம் வைத்துக்கொண்டு மகன் ஸ்தானத்தில் எம்ஜிஆர் செய்த உதவி அங்கிருந்து அனைவரையுமே அன்று வியக்க வைத்தது.

Nanthini

Recent Posts

அட கொடுமையே… திடீரென சரிந்த இரும்புக் குழாய்கள்… கண்ணிமைக்கும் நேரத்தில் நசுங்கிப் போன உயிர்… ஹைதராபாத்தில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்…!

ஹைதராபாத் பாலநகர் மேம்பாலம் அருகே வியாழக்கிழமை மதியம் 3.30 மணியளவில் சோகமான விபத்து ஒன்று நிகழ்ந்துள்ளது. ஷாபூரிலிருந்து அமீர்பேட்டையிலுள்ள தனது…

12 minutes ago

திக் திக்… நகைகளுக்காக நடந்த கொடூர கொலை?… கால்வாயில் மூட்டையில் சடலமாக மீட்கப்பட்ட 67 வயது மூதாட்டி… குலை நடுங்கவைக்கும் சம்பவம்…!!

கடந்த அக்டோபர் 3-ஆம் தேதி வீட்டை விட்டு வெளியேறிய 67 வயதான லக்ஷ்மம்மா என்ற மூதாட்டி, மீண்டும் வீடு திரும்பவில்லை.…

26 minutes ago

“இனி மெடல் வேட்டைதான்”… புதிய வரலாறு… தங்கம் வென்றால் ரூ.5 கோடி… அதிரடி காட்டிய முதல்வர் விஜய்… ஆடிப்போன விளையாட்டு உலகம்…!!

தமிழ்நாடு அரசு விளையாட்டுத் துறையையும், சர்வதேச அரங்கில் பதக்கங்களை வெல்லும் விளையாட்டு வீரர்களையும் ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு சிறப்புத் திட்டங்களைச்…

9 மணத்தியாலங்கள் ago

இப்படி சொல்லிட்டாரே…! “இளையராஜா பற்றி என்னிடம் பேசக்கூடாது…” மேடையில் கட் அண்ட் ரைட்டாக பேசி பரபரப்பை கிளப்பிய மிஷ்கின்…!!

திரைப்பட இயக்குநரும் நடிகருமான மிஷ்கின், 'டோரதி' என்ற திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு வழக்கம்போல தனது அதிரடி கருத்துகளால்…

9 மணத்தியாலங்கள் ago

மாஸ்டர் பிளான் சக்சஸ்!… அமைச்சரவையில் பாமக என்ட்ரி?… கதறும் விசிக… தவெகவின் ரகசிய ‘4:2’ டீலிங்… தமிழக அரசியலில் பூகம்பம்…!!

தமிழக சட்டமன்றத்தில் தவெக அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவரப்படலாம் என்ற சூழல் எழுந்துள்ள நிலையில், கம்யூனிஸ்ட் கட்சிகளின்…

9 மணத்தியாலங்கள் ago

“முத்துக்குமரன் எங்கள் ஆள் இல்லை…” திமுகவா..? தவெகவா…? சர்ச்சைக்கு மத்தியில் மாறி மாறி சண்டை போடும் நெட்டிசன்கள்…!!

பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னரான முத்துக்குமரன் மீது வஹிதா என்ற பெண் உடல் ரீதியான தொடர்பு…

9 மணத்தியாலங்கள் ago