இளையராஜாவுக்காக கொட்டும் மழையிலும் கூட்டம் கூட்டமாக கூடிய மக்கள்.. பஞ்சு அருணாச்சலம் பகிர்ந்த ருசிகர சம்பவம்..!

By Nanthini on சித்திரை 22, 2025

Spread the love

தனது இசையால் பலரையும் கட்டி போட்டவன் தான் இசைஞானி இளையராஜா. இவருடைய இசைக்கி மயங்காதவர்கள் யாருமே கிடையாது என்று தான் சொல்ல வேண்டும். அன்னக்கிளி திரைப்படம் மூலமாக அறிமுகமான இளையராஜா இன்னும் இசையின் மூலமாக ராஜாங்கம் நடந்ததி கொண்டிருக்கிறார். இவரின் முதல் படத்திலிருந்து இவருடைய பாடல்கள் சரித்திரமாக தொடங்கி விட்டது. அன்னக்கிளி உன்னைத் தேடுதே என்ற பாடலின் ஹம்மிங் மனதிற்குள் புகுந்து மனதை கரைத்து விடும்.

இளையராஜா: அன்னக்கிளி முதல் சிம்ஃபொனி வரை இளையராஜாவின் 50 ஆண்டு இசைப்பயணம் -  ஒரு மீள்பார்வை - BBC News தமிழ்

   

இப்படி அடுத்தடுத்த படத்திற்கு இசையமைத்து அனைவரையும் கட்டுப்போட்ட இளையராஜா இதுவரை 1500 க்கும் அதிகமான படங்களுக்கு இசையமைத்துள்ளார். ஏராளமான மேடை நிகழ்ச்சிகளையும் அரங்கேற்றியுள்ள இளையராஜா பத்தாயிரத்திற்கும் அதிகமான பாடல்களை உருவாக்கியுள்ளார்.  சமீபத்தில் கூட லண்டனில் தனது முதல் சிம்போனியை இளையராஜா அரங்கேற்று இருந்தார்

   

சகலகலா' பஞ்சு அருணாசலம்; - இன்று பஞ்சு அருணாசலம் நினைவு தினம் | panju  arunachalam - hindutamil.in

 

. இப்படியான நிலையில் இளையராஜாவை சினிமாவிற்கு அறிமுகப்படுத்திய தயாரிப்பாளரும் இயக்குனருமான பஞ்சு அருணாசலம் இளையராஜா குறித்து ஒரு மேடையில் பேசும்போது, இளையராஜா அறிமுகமான அன்னக்கிளி திரைப்படத்தின் விழா மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெற்றது. முதல் படத்தின் வெற்றி விழாவுக்கு 1000 மேற்பட்ட கிராமங்களில் இருந்து மக்கள் வந்திருந்தனர். அந்த காலகட்டத்தில் மாட்டு வண்டி தான் இருந்ததால் மைதானத்தை சுற்றி சுமார் 10,000 மாட்டு வண்டிகள் நின்று கொண்டிருந்தது.

HBD Panchu Arunachalam : இளையராஜாவை அறிமுகப்படுத்தியவர் இவர் தான்.. பாதி  கதை அருணாச்சலம் என ஏன் அழைத்தார்கள் தெரியுமா?

ராஜாவின் இசையை ரசித்து அவருடைய பாடல்களை கேட்பதற்காக மக்கள் அனைவரும் குடும்பம் குடும்பமாக வந்திருந்தனர். அப்போது கச்சேரி ஆரம்பித்து நான்கு பாட்டு பாடி முடிப்பதற்குள் பயங்கரமான மழை வந்துவிட்டது. கொட்டும் மழையிலும் மக்கள் யாருமே அந்த இடத்தை விட்டு நகராமல் நீங்க பாடுங்க என்று இளையராஜாவை நோக்கி கத்தினர். அந்தக் கொட்டும் மழையில் கிட்டத்தட்ட 3:30 மணி நேரம் இளையராஜா கச்சேரி செய்தார். அந்த இசை மழை 40 வருடமாக கொட்டிக் கொண்டிருக்கிறது. இன்னும் பல வருடங்களுக்கு இந்த இசை மழை கொட்டும் என்று பஞ்சு அருணாச்சலம் இளையராஜாவை புகழ்ந்து பேசி உள்ளார்.