தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனரான ஷங்கர் இந்தியன் 2 படத்தை இயக்குகிறார். லைகா ப்ரொடக்ஷன்ஸ் பெரும் பொருட்செலவில் இந்த படத்தை பிரமாண்டமாக தயாரிக்கிறது. உலகநாயகன் கமலஹாசன் தந்தை, மகன் என இரட்டை கதாபாத்திரத்தில் நடித்து 1996 இல் வெளியான திரைப்படம் ‘இந்தியன்’. இப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில், தற்போது ‘இந்தியன் 2’ திரைப்படம் தயாராகி வருகிறது.
2019 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்தியன் 2 பட பிடிப்பானது பல்வேறு பிரச்சினைகளால் நிறுத்தப்பட்டது. பல மாதங்களாக நிறுத்தப்பட்ட இப்படப்பிடிப்பு தற்பொழுது மீண்டும் தொடங்கியுள்ளது. கமல்ஹாசன் உடன் இணைந்து காஜல் அகர்வால் கதாநாயகியாக நடிக்க, சித்தார்த், குரு சோமசுந்தரம், ரகுள் பிரீட் சிங், ப்ரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, டெல்லி கணேஷ், ஜெயப்பிரகாஷ், வென்னெலா கிஷோர், ஜார்ஜ் மரியான், மனோபாலா, ஹாலிவுட் நடிகர் பெனிடிக்ட் கேரெட் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
இத்திரைப்படத்தில் முக்கிய வில்லன் கதாபத்திரத்தில் நடிகர் எஸ் ஜே சூர்யா நடிக்க உள்ளதும் குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே இந்தியன் 2 திரைப்படத்தின் டப்பிங் பணிகளை நிறைவு செய்துவிட்டார் கமல்ஹாசன். இதுதொடர்பான வீடியோவும் இணையத்தில் சமீபத்தில் வெளியாகி வைரலானது.
இந்நிலையில் உலக நாயகன் கமல்ஹாசனின் இந்தியன் 2 படத்தின் இன்ட்ரோ வீடியோவை நாளை மாலை 5.30 மணிக்கு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிடப் போவதாக தற்போது லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதேபோல் தெலுங்கில் பிரபல இயக்குனர் எஸ் எஸ் ராஜமௌலி, ஹிந்தியில் நடிகர் அமீர் கான், கன்னடத்தில் நடிகர் கிச்சா சுதீப் மலையாளத்தில் நடிகர் மோகன் லாலும் வெளியிடுகிறார்கள். இதற்கான அறிவிப்புகள் தற்பொழுது அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறது.
மத்தியப் பிரதேச மாநிலம் குனோ தேசியப் பூங்காவில் 19 மாத வயதுடைய ஆண் சிறுத்தை ஒன்று துப்பாக்கிக் குண்டு பாய்ந்த…
தலைநகர் டெல்லியின் பஞ்சாபி பாக் பகுதியில் புதன்கிழமை அதிகாலை நிகழ்ந்த கோர விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் ஒருவர்…
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே காதில் இயர்போன் மாட்டியபடி ரயில் தண்டவாளத்தில் நடந்து சென்ற நபர் ஒருவர், ஓட்டுநர் தொடர்ச்சியாக…
பஞ்சாப் மாநிலம் கிரத்பூர் சாஹிப் அருகே நிகழ்ந்த கோர விபத்தில் நான்கு பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இமாச்சலப் பிரதேசத்தின் குல்லு…
வீட்டில் யாரிடமும் சொல்லாமல் இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்ற 10-ஆம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுவன் ஒருவன், பெற்றோரின்…
கர்நாடக மாநிலம் பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி அருகே அதிவேகமாக வந்த டோயோட்டா ஃபார்ச்சூனர் சொகுசு கார் மோதியதில், சைக்கிளில் சென்ற…