“யார் அந்த ‘பவர்சென்டர்’…? தமிழகத்தையே உலுக்கும் ரூ100 கோடி… பழனி கோவில் நில விவகாரம்… CM விஜய்க்கு EPS போட்ட அதிரடி சவால்…!!”

By Swetha on ஆடி 17, 2026

Spread the love

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலுக்குச் சொந்தமான, சுமார் 100 கோடி ரூபாய் மதிப்பிலான நிலம் வெறும் 2 கோடி ரூபாய்க்குத் தனியாருக்கு முறைகேடாகப் பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். இந்த விவகாரத்தை ஒரு சாதாரண எழுத்தர் பிழை போலக் கடந்து செல்லத் தமிழக அரசு முயல்வது ஏற்புடையதல்ல என்றும், தவறு நடந்துள்ளதை அமைச்சரே ஒப்புக்கொண்டிருப்பதால் இது ஒரு மிகப்பெரிய ஊழல் என்றும் அவர் சாடியுள்ளார். மேலும், இந்த நிலப் பரிமாற்றம் யாருடைய பெயரில் செய்யப்பட்டது, இந்த விபரங்கள் ஏன் இன்னும் பொதுவெளியில் வரவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த முறைகேட்டின் பின்னணியில் ஏதோ ஒரு வலிமைமிக்க நபர் இருந்து உத்தரவுகளைப் பிறப்பித்திருக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி சந்தேகம் எழுப்பியுள்ளார். ஆரம்பத்தில் இந்த நிலத்தைப் பதிவு செய்ய மறுத்த சார்பதிவாளர் மாற்றப்பட்டு, புதிய அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்ட பிறகே இந்த பத்திரப்பதிவு நடந்து முடிந்துள்ளது என்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அதிகாரியையே மாற்றும் அளவிற்குத் துணிச்சலாகச் செயல்பட்ட அந்தப் பின்னணி நபர் யார் என்பதை, தனது ஆட்சியில் தான் மட்டுமே ‘பவர்சென்டர்’ என்று கூறிக்கொள்ளும் முதல்வர் விஜய் தெளிவுபடுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

   

மாநில அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் சிபிசிஐடி இந்த வழக்கை விசாரித்தால், அதிகாரப் பின்னணியில் இருக்கும் நபர்களைப் பற்றிய உண்மையான பதில்களும் நியாயமும் கிடைக்காது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே, இந்த 100 கோடி ரூபாய் கோவில் சொத்து முறைகேடு வழக்கில் நேர்மையான மற்றும் வெளிப்படையான விசாரணை நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும். இதற்கு இந்த வழக்கைத் உடனடியாக மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ விசாரணைக்கு மாற்றிட வேண்டும் என முதல்வர் விஜய் தலைமையிலான அரசை எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.