பழனியில் சுமார் ரூ.100 கோடி மதிப்பிலான திருக்கோயில் நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் வெறும் ரூ.2 கோடிக்கு மோசடியாக பத்திரப்பதிவு செய்த வழக்கில், சிபிசிஐடி காவல்துறை அதிரடியாக 3 பேரைக் கைது செய்துள்ளது. திருப்பூரைச் சேர்ந்த வெள்ளைத்துரை, பழனியைச் சேர்ந்த அன்வர்தீன் மற்றும் விழுப்புரத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளி ஆசிரியர் முருகதாஸ் ஆகியோரே இவ்வாறு கைதானவர்கள் ஆவர்.
தமிழக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நில ஆக்கிரமிப்பு விவகாரத்தில், தவெக அரசு கடும் விமர்சனங்களைச் சந்தித்து வந்த நிலையில், சிபிசிஐடி மேற்கொண்ட இந்த முதல் கட்டக் கைது நடவடிக்கை தற்போது பொதுமக்கள் மத்தியிலும் அரசியல் வட்டாரத்திலும் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.
