ரீல் மகளுடன் சேர்ந்து காவாலா பாட்டுக்கு மெர்சல் ரியாக்ஷன் கொடுத்த பாக்கியா… வீடியோ பார்த்து அசந்து போன இணையவாசிகள்…!!

By Nanthini on ஆடி 24, 2023

Spread the love

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியல் ஒரு நல்ல குடும்ப கதையாக ரசிகர்கள் மத்தியில் பலம் வருகிறது. தினம்தோறும் தவறாமல் இந்த சீரியலை பார்ப்பதற்கே ஒரு ரசிகர் பட்டாளம் உள்ளது.  இந்த சீரியல் குடும்பப் பெண்களின் வாழ்க்கையை அற்புதமாக எடுத்துரைக்கிறது.

   

வாழ்வில் எத்தனை துன்பங்கள் இருந்தாலும் குடும்ப தலைவியாக இருந்து அனைத்து குடும்ப உறுப்பினர்களையும் கட்டிக் காக்கும் பாக்யாவின் இந்த குடும்ப கதை ரசிகர்கள் மத்தியில் எப்போதும் ஹிட் தான். இந்த சீரியலில் பாக்கியாவாக நடித்து வருபவர்தான் சுசித்ரா. இவரின் எளிமையான நடிப்பு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

   

 

இந்நிலையில் இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்வது வழக்கம். இந்நிலையில் பாக்கியா இனியாவுடன் இணைந்து தற்போது ட்ரெண்டிங் பாடலாக உள்ள காவாலா பாடலுக்கு ரீல்ஸ் வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வர அதனை பார்த்த இணையவாசிகள் மகளை விட பாக்கியா அழகா பண்றாங்களே என கருத்துக்களை கூறி வீடியோவை வைரலாக்கி வருகிறார்கள்.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Nehah Rajesh இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@_nehah_official_)