பாகிஸ்தானில் பயணம் செய்த அமெரிக்க வ்லாகர் ஒருவர், அங்குள்ள சொகுசு பேருந்து ஒன்றில் நடந்த வினோதமான பாதுகாப்பு நடைமுறையைக் கண்டு அதிர்ச்சியடைந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சுமார் 6 மணிநேர பயணத்திற்காக 3600 பாகிஸ்தான் ரூபாய் செலுத்தி அந்தப் பேருந்தில் பயணித்த அவர், அங்கிருந்த ஏசி வசதி மற்றும் சிற்றுண்டிகளால் கவரப்பட்டார்.
ஆனால், திடீரென பேருந்து ஊழியர் ஒருவர் கையில் கேமராவுடன் வந்து, பயணிகளின் அனுமதியின்றி ஒவ்வொருவரின் முகத்தையும் மிக நெருக்கமாக வீடியோ எடுத்தது அவருக்கு பெரும் வியப்பை ஏற்படுத்தியது. தனது வாழ்நாளில் இதுபோன்ற ஒரு விஷயத்தை தான் பார்த்ததே இல்லை என அவர் அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.
A post shared by Native Ty (@nativety)
“>
இந்தச் சம்பவம் சமூக வலைதளங்களில் ‘பாதுகாப்பு Vs தனிமனித உரிமை’ குறித்த பெரிய விவாதத்தையே கிளப்பியுள்ளது. ஒரு தரப்பினர், இது பாகிஸ்தானில் நீண்ட தூரப் பயணங்களின் போது பின்பற்றப்படும் ஒரு பொதுவான பாதுகாப்பு நெறிமுறை என்றும், ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் பயணிகளை அடையாளம் காண இது உதவும் என்றும் வாதிடுகின்றனர்.
அதேசமயம், மற்றொரு தரப்பினர் இது பயணிகளின் தனிப்பட்ட சுதந்திரத்தைப் பாதிக்கும் செயல் எனக் கருத்து தெரிவித்து வருகின்றனர். வ்லாகர் அந்தப் பெண்ணின் வீடியோவை எடுத்ததும் விவாதத்திற்குள்ளான நிலையில், இந்த வீடியோ தற்போது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை மீது எழுந்துள்ள தொடர் சர்ச்சைகள், கட்சியின் மேலிடத்தை கடும் அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளதாகத் தெரிகிறது.…
நாசிக்கில் உள்ள இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனமான டிசிஎஸ் (TCS) கிளையில், பெண் ஊழியர் ஒருவருக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல்…
தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது கட்சி நிர்வாகிகளுக்கு விடுத்துள்ள அதிரடி எச்சரிக்கை அரசியல்…
பாகிஸ்தான் தொடர்ந்து தூண்டிவிடும் எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், 1960-ம் ஆண்டு கையெழுத்தான சிந்து நதி நீர்…
கனடா கனவுத் தேசமாகத் தெரிந்தாலும், அங்கு நிலவும் எதார்த்த சூழல் பல இந்திய இளைஞர்களைத் திக்குமுக்காடச் செய்துள்ளது. இதற்குச் சான்றாக,…
மதுரை மத்திய தொகுதியில் நிலவும் உட்கட்சி பூசல் மற்றும் தேர்தல் கள நிலவரங்கள் குறித்து எடப்பாடி பழனிசாமியிடம் நடிகை குஷ்பு…