“அந்த ஆளை நம்ப முடியாது”… அமெரிக்காவை அலறவிட்ட பாகிஸ்தான் அமைச்சர்…. டிரம்பால் வந்த புது தலைவலி…!

Spread the love

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வளைகுடா மற்றும் இஸ்லாமிய நாடுகள் இஸ்ரேலை முறைப்படி அங்கீகரித்து “ஆபிரகாம் உடன்படிக்கையில்” (Abraham Accords) கையெழுத்திட வேண்டும் எனத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். தனது ட்ரூத் சோஷியல் பக்கத்தில் சவூதி, கத்தார், துருக்கியுடன் பாகிஸ்தானையும் குறிப்பிட்டு, இந்த மெகா அமைதி ஒப்பந்தத்தில் இணையுமாறு டிரம்ப் கடுமையான அழுத்தத்தைக் கொடுத்துள்ளார். இதற்குப் பதிலடி கொடுத்துள்ள பாகிஸ்தான், கிழக்கு ஜெருசலேமைத் தலைநகராகக் கொண்ட சுதந்திர பாலஸ்தீன நாடு அமையாதவரை, இஸ்ரேலை ஒருபோதும் நாடாக அங்கீகரிக்க முடியாது எனத் திட்டவட்டமாக மறுத்துள்ளது.

கடந்த 2020-ஆம் ஆண்டு டிரம்பின் முதல் அதிபர் காலத்தில், அமெரிக்காவின் நேரடி மத்தியஸ்தம் மூலம் இஸ்ரேலுக்கும் அரபு நாடுகளுக்கும் இடையே சுமுகமான உறவை ஏற்படுத்த இந்த ஆபிரகாம் உடன்படிக்கை உருவாக்கப்பட்டது. இதன் விளைவாக ஐக்கிய அமீரகம், பஹ்ரைன், மொராக்கோ போன்ற நாடுகள் பாலஸ்தீனப் பிரச்சனைக்கு முழுமையான தீர்வு காண்பதற்கு முன்பாகவே இஸ்ரேலுடன் தூதரக மற்றும் வர்த்தக உறவுகளைத் தொடங்கின. தற்போது கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தான், அமெரிக்காவின் சர்வதேச நிதி அழுத்தங்களுக்குப் பயந்து, எதிர்காலத்தில் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு இந்த உடன்படிக்கையில் கையெழுத்திட வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படலாம் என அரசியல் வல்லுநர்கள் கணிக்கின்றனர்.

ஒருவேளை அமெரிக்காவின் பிரஷர் காரணமாக பாகிஸ்தான் இஸ்ரேலை அங்கீகரித்தால், அதற்குப் புதியதொரு சட்டப்பூர்வ மற்றும் கொள்கை ரீதியிலான தலைவலி காத்துள்ளது. அதுதான் பாகிஸ்தானின் அதிகாரப்பூர்வ பாஸ்போர்ட் கொள்கை. உலகிலேயே பாகிஸ்தான் பாஸ்போர்ட்டில் மட்டும்தான் “இந்த பாஸ்போர்ட் இஸ்ரேல் தவிர உலகின் அனைத்து நாடுகளுக்கும் செல்லுபடியாகும்” (This passport is valid for all countries of the world except Israel) என்ற வாசகம் மிக வெளிப்படையாக அச்சிடப்பட்டுள்ளது.

டிரம்பின் விருப்பப்படி ஆபிரகாம் உடன்படிக்கையில் பாகிஸ்தான் இணைய வேண்டுமானால், முதலில் தனது பாஸ்போர்ட்டில் உள்ள இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வரியை அடியோடு நீக்க வேண்டும். இல்லையெனில், ஒரு நாட்டை முறைப்படி ராஜதந்திர ரீதியாக அங்கீகரித்துவிட்டு, அதே நாட்டுக்குத் தங்களின் குடிமக்கள் செல்ல பாஸ்போர்ட்டில் தடை விதிப்பது என்ற விசித்திரமான சட்ட முரண்பாட்டை அது சர்வதேச அரங்கில் உருவாக்கும். சமீபத்தில் வங்கதேசம் சர்வதேச இ-பாஸ்போர்ட் தரநிலைகளுக்காகத் தனது பாஸ்போர்ட்டிலிருந்து இந்த “Except Israel” வரியை நீக்கியது போல, பாகிஸ்தானும் தனது கொள்கையை விட்டுக் கொடுக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Nanthini

Recent Posts

“பொண்டாட்டி கொலையாகி 75 நாள் ஆச்சு… என்னையே டார்கெட் பண்றாங்க…” என் பிள்ளைகளுக்கு என்ன பதில் சொல்வேன்…. மனைவியை இழந்த கணவரின் கதறல்…!!

திருச்சி மாவட்டம் லால்குடியை அடுத்த சிறுகளப்பூரைச் சேர்ந்தவர் நந்தகுமார். இவருடைய மனைவி செந்தமிழ்ச்செல்வி கடந்த ஜூன் 30-ம் தேதி இரவு…

5 minutes ago

ஐயோ கடவுளே… காவல் நிலைய சாக்கடையில்… 17 வயது சிறுவன் பிணமாக மீட்பு… நெஞ்சை நடுங்கவைக்கும் வீடியோ… ஆக்ராவில் பெரும் பரபரப்பு…!

ஆக்ரா மாவட்டம் மல்பூரா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தனௌலி காவலர் சாவடிக்கு பின்புறம் உள்ள சாக்கடையில், 17 வயதான சிவம்…

7 minutes ago

“‘என் மகனை காதலித்தால் இதை பண்ணு…” சிறுமியை மிரட்டிய மாணவனின் தாய்…. அடுத்து நடந்த விபரீதம்… சிக்கிய ஆடியோ ஆதாரம்…. பகீர் சம்பவம்…!!

குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்த 17 வயது பள்ளி மாணவன், தான் படிக்கும் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை…

18 minutes ago

பகீர் கிளப்பும் மரணம்… 7- ஆம் வகுப்பு மாணவனுக்கு என்ன ஆச்சு?… ஏகலவ்யா மாதிரிப் பள்ளியில் தொடரும் சோகம்… கதறித் துடிக்கும் பெற்றோர்… பின்னணி என்ன?…

ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் மீண்டும் ஒரு சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. மான்யம் மாவட்டம் அனசபத்ராவில் உள்ள ஏகலவ்யா மாதிரி குடியிருப்புப்…

33 minutes ago

“கட்சி இணைப்புக்கு நோ… கூட்டணிக்கு ஓகே…” மீண்டும் எழும் ‘பவர் சென்டர்’ பிரச்சனை…. டிடிவி தினகரனின் கோரிக்கையை ஏற்க இபிஎஸ் யோசனை…!!

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை மீண்டும் அதிமுகவுடன் இணைக்க அதன் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் திட்டமிட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.…

33 minutes ago

திக் திக்… துரோகத்தை தட்டிக்கேட்ட சட்டக்கல்லூரி மாணவி… நடுரோட்டில் அரங்கேறிய வெறிச்செயல்.. பெங்களூரை உலுக்கிய பகீர் சம்பவம்…!!

பெங்களூரில் சட்டக்கல்லூரி மாணவியும், பிட்சா விற்பனை மைய ஊழியருமான 21 வயது அம்ருதா என்பவரைப் பின்னால் இருந்து தாக்கி கத்தியால்…

42 minutes ago