பரபரப்பு..! மைதானத்திலேயே கைகலப்பு.. பயிற்சியாளர் முகத்தில் பாட்டிலை வீசிய பாகிஸ்தான் கேப்டன் – அதிர்ச்சி வீடியோ..!!

By Soundarya on மாசி 19, 2026

Spread the love

2026-ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையில் நமீபியாவுக்கு எதிரான ஆட்டத்தின் போது, பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி ஆகா மற்றும் தலைமைப் பயிற்சியாளர் மைக் ஹெசன் ஆகியோருக்கு இடையே மைதானத்திலேயே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் போட்டியில் சல்மான் அலி ஆகா 23 பந்துகளில் 38 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவர் பெவிலியன் திரும்பிய போது, அவரது ‘ஷாட் செலக்ஷன்’ குறித்து பயிற்சியாளர் மைக் ஹெசன் அதிருப்தி தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சல்மான் அலி ஆகா, பயிற்சியாளரிடம் ஆக்ரோஷமாக வாதிட்டதுடன், கையில் இருந்த தண்ணீர் பாட்டிலை தரையில் தூக்கி எறிந்து தனது கோபத்தை வெளிப்படுத்தினார்.

இந்த மோதல் நடந்த போது, முன்னாள் கேப்டன் பாபர் அசாம் அவர்களுக்கு அருகிலேயே அமர்ந்து மிகவும் தர்மசங்கடமான நிலையில் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்திய அணியிடம் ஏற்கனவே 61 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்திருந்த பாகிஸ்தானுக்கு, நமீபியாவுடனான போட்டி மிகவும் முக்கியமானதாக இருந்தது. இந்த வாழ்வா-சாவா ஆட்டத்தின் அதீத அழுத்தம் காரணமாகவே இருவருக்கும் இடையே இத்தகைய மோதல் வெடித்ததாகக் கருதப்படுகிறது. இறுதியில் இந்தப் போட்டியில் பாகிஸ்தான் 102 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாலும், கேப்டன் மற்றும் பயிற்சியாளர் இடையிலான இந்த மோதல் அணியின் ஒற்றுமை குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.