துபாயில் ஆசிய கோப்பை 2025 இறுதி போட்டி நடைபெற்றது. இதில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதியது. டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணியானது 19.1 ஓவரில் 146 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 147 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு களமிறங்கிய இந்தியா 19.4 ஓவரில் 150 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்று ஆசிய கோப்பையை கைப்பற்றியது. இந்தநிலையில் பாகிஸ்தானின் உள்துறை அமைச்சரும் ,ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவருமான மோஷின் நக்வி கையிலிருந்து ஆசிய கோப்பை வாங்குவதற்கு இந்திய அணிகள் மறுத்து விட்டார்கள்.
Salman threw his check
Salman is drunk
Does Islam allow this behavior?
😳
— Kreately.in (@KreatelyMedia) September 28, 2025
இந்நிலையில், Runner-up-க்கான செக்கை வாங்கிய பாகிஸ்தான் அணியின் கேப்டன் சல்மான் அகா, மேடையில் இருந்தவாறே வீரர்கள் நிற்கும் இடம் நோக்கி தூக்கி எறிந்தார். இந்த செயல் பாகிஸ்தான் உள்பட ஒட்டுமொத்த ஆசிய மக்களையே அவமதிக்கும் செயல் என்று இணையவாசிகள் விமர்சிக்கின்றனர்.
