இந்திய அணியின் அணுகுமுறை குறித்து பாகிஸ்தான் கேப்டன் சல்மான் ஆகா கடுமையான குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார். இது குறித்து பேசிய அவர், இந்த தொடரில் இந்திய அணி நடந்து கொண்டது ஏமாற்றம் அளிக்கிறது. எங்களுக்கு அவமரியாதை அல்ல. அது கிரிக்கெட்டுக்கு அவர்கள் கொடுத்த அவமரியாதை. நாங்கள் கோப்பையோடு புகைப்படம் எடுத்துக் கொண்டு எங்களுடைய கடமையை சரியாக செய்தோம். தொடர் தொடங்குவதற்கு முன்பாக தனிப்பட்ட முறையில் என்னோடு சூரிய குமார் யாதவ் கை குலுக்கினார். கேமராவுக்கு முன்பு கைகுலுக்க மறுத்தார்.
அது யாரோ சொல்லி தான் அப்படி நடந்துகொண்டார்கள். நான் கடுமையான வார்த்தைகளை பயன்படுத்த விரும்பவில்லை. ஆனால் மிக அவமரியாதையாக நடந்து கொண்டார்கள். என் வாழ்வில் இது நடப்பதை நான் முதன்முறையாக பார்த்துள்ளேன். இந்த தொடரில் நடந்ததை மிகவும் மோசமானவை. இது ஒரு கட்டத்தில் இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இந்தியாவிலோ அல்லது பாகிஸ்தானிலோ இதை ஒரு குழந்தை பார்த்தால் நாம் அவர்களுக்கு ஒரு நல்ல செய்தியை அனுப்பவில்லை.
மக்கள் எங்களை முன் மாதிரியாக நினைக்கிறார்கள். ஆனால் நாங்கள் இப்படி நடந்து கொண்டால் நாங்கள் அவர்களுக்கு உத்வேகம் கொடுக்கவில்லை. ACC க்கு தலைவர் ஒருவர் என்றால் அவரிடம் இருந்து கோப்பை வாங்குவது தான் முறை. நீங்கள் அதை அவரிடம் வாங்காமல் வேறு எப்படி வாங்குவீர்கள்? நான் இதை மீண்டும் சொல்கிறேன் என்ன நடந்ததோ அது தவறு. அது நடந்திருக்கக் கூடாது அதை செய்தவர்கள் விசாரிக்கப்பட வேண்டும்” என்று கூறியுள்ளார்.
