தேனி மாவட்டம் பண்ணைப்புரத்தில் டேனியல் ராமசாமி – சின்னத்தாயம்மாள் தம்பதியருக்கு 1943 ஜூன் 2 அன்று பிறந்தவர் இளையராஜா. இவரது இயற்பெயர் ஞானதேசிகன் ஆகும். பின்னர் டேனியல் ராசய்யா, ராஜையா எனப் பெயர் மாற்றங்கள் பெற்று, இறுதியில் இவரது இசை ஆசிரியர் தன்ராஜ் மாஸ்டர் இவருக்கு ‘ராஜா’ எனப் பெயரிட்டார். வறுமை காரணமாகப் பள்ளிப்படிப்பைப் பாதியிலேயே நிறுத்திய இவர், தனது 14வது வயதில் நாட்டுப்புறப் பாடல்களால் ஈர்க்கப்பட்டு, 19வது வயதில் தனது சகோதரர்களுடன் நாடகக் குழுவில் இணைந்து ஆயிரக்கணக்கான கச்சேரிகளில் பங்கேற்றார். பின்னர் லண்டன் டிரினிடி இசைக்கல்லூரியில் கிளாசிக்கல் கிட்டாரில் தங்கப் பதக்கம் வென்றார்.
இயக்குநர் பஞ்சு அருணாச்சலம் அவர்களால் 1976 ஆம் ஆண்டு ‘அன்னக்கிளி’ திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு இளையராஜா அறிமுகம் செய்யப்பட்டார். மேற்கத்திய இசையோடு தமிழ் மரபு மற்றும் நாட்டுப்புற இசையைக் கலந்து அவர் உருவாக்கிய பாடல்கள் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன. அதனைத் தொடர்ந்து ’16 வயதினிலே’, ‘மூன்றாம் பிறை’, ‘நாயகன்’, ‘தளபதி’ உட்பட பல நூற்றுக்கணக்கான படங்களுக்கு இசையமைத்துப் புகழின் உச்சிக்கே சென்றார். தமிழ் மட்டுமன்றி தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் எனப் பல மொழிகளில் 950க்கும் மேற்பட்ட படங்களுக்கு மேல் 4,500க்கும் அதிகமான பாடல்களுக்கு இசையமைத்து இந்திய அளவில் தலைசிறந்த இசையமைப்பாளராக உயர்ந்தார்.
ராயல் ஃபில்ஹார்மோனிக் ஆர்கெஸ்டிராவில் சிம்பொனி இசையமைத்ததால் திரையுலகினரால் “மேஸ்ட்ரோ” என்று அழைக்கப்படும் இவர், “பஞ்சமுகி” என்ற புதிய கர்நாடக செவ்வியலிசை ராகத்தை உருவாக்கினார். மேலும் ‘ஹவ் டு நேம் இட்’ போன்ற புகழ்பெற்ற இசைத்தொகுப்புகளையும், பக்தி ஆல்பங்களையும் வெளியிட்டுள்ளார். ஆன்மீகம் மற்றும் இலக்கியத்தில் ஆர்வம் கொண்ட இவர், ‘சங்கீதக் கனவுகள்’, ‘வெட்ட வெளிதனில் கொட்டிக் கிடக்குது’ உட்பட பல நூல்களை எழுதியுள்ளார். இவரது மனைவி ஜீவா ஆவார்; இவர்களது பிள்ளைகளான கார்த்திகேயன், யுவன் ஷங்கர் ராஜா, பவதாரிணி மற்றும் இவரது சகோதரர் கங்கை அமரன் ஆகியோரும் இசைத்துறையில் சிறந்து விளங்குவது குறிப்பிடத்தக்கது.
இசையுலகில் ஆற்றிய அபரிமிதமான பங்களிப்பிற்காக இந்திய அரசின் ‘பத்ம பூஷன்’, ‘சங்கீத் நாடக அகாடமி விருது’ மற்றும் தமிழக அரசின் ‘கலைமாமணி விருது’ ஆகியவற்றை இளையராஜா பெற்றுள்ளார். மேலும், ‘சாகர சங்கமம்’, ‘சிந்து பைரவி’ உள்ளிட்ட படங்களுக்காக 4 முறை தேசிய விருதுகளையும், பலமுறை ஃபிலிம்ஃபேர் விருதுகளையும், தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா (நந்தி விருது), மத்திய பிரதேசம் (லதா மங்கேஷ்கர் விருது) ஆகிய மாநில அரசுகளின் உயரிய விருதுகளையும் வென்றுள்ளார். இவரது அரிய சாதனையைக் கௌரவிக்கும் விதமாக அண்ணாமலை மற்றும் மதுரை காமராசர் பல்கலைக்கழகங்கள் இவருக்கு மதிப்புறு முனைவர் (Doctorate) பட்டம் வழங்கிச் சிறப்பித்துள்ளன.
கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…
உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…
தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…
கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…
உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…
உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…