தன்பெயரில் உள்ள வேறொரு நபர் செய்த போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தை, அரசியல் உள்நோக்கத்தோடு தன்னுடன் தொடர்புபடுத்தி யூடியூபர் மாரிதாஸ் உள்ளிட்ட பலர் சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பி வருவதாக கோவை காவல் ஆணையர் அலுவலகத்தில் பாஜகவைச் சேர்ந்த ஜான் பிரிட்டோ புகார் அளித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தாம் கோயம்புத்தூரில் பிளாஸ்டிக் மறுசுழற்சி நிறுவனம் நடத்தி வருவதாகவும், தமக்கும் போதைப்பொருள் கடத்தல் வழக்குக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்றும் திட்டவட்டமாக மறுத்துள்ளார். கேரளாவில் உள்ள லாட்டரி சம்பந்தமான வழக்கைத் தவிர, தன் மீதோ அல்லது லால்குடி தொகுதி முன்னாள் அதிமுக எம்எல்ஏ-வான தனது தங்கை லீமா ரோஸ் மீதோ வேறு எந்த வழக்கும் இல்லை என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
ஒரே பெயரைக் கொண்ட வேறொரு நபரின் குற்றப்பின்னணியை வைத்து, யூடியூப்பில் திட்டமிட்டே போலிச் செய்திகள் பரப்பப்படுவதாக ஜான் பிரிட்டோ வேதனை தெரிவித்துள்ளார். இந்த அவதூறுகளால் தனது தொழிலும், குடும்பத்தின் நற்பெயரும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், ஏற்கனவே உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள தனக்கு இது பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தியிருப்பதாகக் கூறினார். தனக்கும் தன் குடும்பத்தினருக்கும் கலங்கம் விளைவிக்கும் நோக்கில் செயல்பட்ட யூடியூபர் மாரிதாஸ் மற்றும் தவறான பதிவுகளைப் பரப்பிய 51 யூடியூப் சேனல்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கக் கோரியும், அந்தப் பதிவுகளை உடனடியாக நீக்க வலியுறுத்தியும் அவர் காவல்துறையிடம் மனு அளித்துள்ளார்.
செய்தியாளர் சந்திப்பில் தொடர்ந்து பேசிய ஜான் பிரிட்டோவின் மகன் கிளிங்டன், ஒரே மாதிரியான பெயர் இருப்பதைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு திமுக ஐடி விங் (DMK IT Wing) அரசியல் உள்நோக்கத்தோடு இந்த அவதூறுகளைப் பரப்பி வருவதாகக் குற்றம் சாட்டினார். தங்கள் குடும்பத்தை அசிங்கப்படுத்த வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காகவே இத்தகைய பொய்யான தகவல்கள் பரப்பப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார். பெயர்க் குழப்பத்தை மூலதனமாக வைத்து அரசியல் பழிவாங்கும் நோக்கில் பரப்பப்படும் இந்த அவதூறு விவகாரம் தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாமல்லபுரம் அடுத்த பையனூர் ஓஎம்ஆர் சாலையில் நிகழ்ந்த கோர விபத்து அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேகமாக வந்த வேனும்,…
வங்கக் கடலில் புதிய புயல் சின்னம் உருவாக வாய்ப்புள்ளதைத் தொடர்ந்து, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம்…
மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் சிட்கோ பகுதியில் உள்ள ஒயின் ஷாப் ஒன்றில், பிரஷர் கன் மூலம் பாய்ந்த இரும்பு ஆணி…
தேசியவாத காங்கிரஸ் தலைவரும் மூத்த அரசியல்வாதியுமான சரத் பவாருக்கு அண்மையில் ஏற்பட்ட உடல்நலக் குறைவைத் தொடர்ந்து, அவருக்குப் பூரண ஓய்வளிக்க…
குஜராத் மாநிலம் சூரத் பகுதியில், வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்காததால் ஏற்பட்ட தகராறில் சக ஊழியரின் தலையைத் துண்டித்து மயானத்தில்…
பீகார் மாநிலம் பக்ஸார் மாவட்டத்தைச் சேர்ந்த ஊரக வளர்ச்சி அதிகாரி அல்பிதா சிங், கடந்த எட்டு மாதங்களாகத் தனக்கு சம்பளம்…