Categories: சினிமா

கடைசியா சிவாஜிய பாத்தபோது அவரை நாற்காலியில் உட்காரவைத்து தூக்கிவந்தனர்… பத்மினி பகிர்ந்த எமோஷனல் தகவல்!

Spread the love

சிவாஜி கணேசன் தன்னுடைய சினிமா கேரியரில் அதிக படங்களில் சேர்ந்து நடித்தது பத்மினியோடுதான். இருவரும் இணைந்து 59 படங்களில் இணைந்து நடித்துள்ளனர். சிவாஜி சினிமாவில் அறிமுகமாவதற்கு முன்பே பத்மினி சினிமாவில் அறிமுகமாகி சூப்பர் ஸ்டார் நடிகையாக இருந்தார்.

அப்போது சிவாஜி எம் ஆர் ராதாவின் குழுவில் ஒருவராக நாடகங்களில் நடித்து வந்துள்ளார். எம் ஆர் ராதாவின் இழந்த காதல் நாடகத்தைக் காண பத்மினி சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டுள்ளார். அதைப் பார்க்க வந்த பத்மினியிடம் சிவாஜி கணேசன் “நான் உங்கள் நடிப்புக்கு ரசிகன். உங்களோடு சேர்ந்து ஒரு படமாவது நடிக்க வேண்டும் என்று எனக்கு ஆசை” எனக் கூறினாராம். ஆனால் அவர்கள் இருவரும் கிட்டத்தட்ட 60 படங்களில் இணைந்து நடித்தார்கள்.

இந்த ஜோடியை அந்தளவுக்கு ரசிகர்கள் ரசித்தார்கள். இவர்கள் இருவரும் திரையில் நடிப்பதைப் பார்த்த ரசிகர்கள் அவர்கள் உண்மையிலேயே காதலர்கள் என நினைத்துக் கொள்ளும் அளவுக்கு இருந்தது அவர்கள் கெமிஸ்ட்ரி. ஆனால் பத்மினி வெளிநாட்டுக் காரர் ஒருவரை திருமணம் செய்துகொண்டார். சிவாஜியும் திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆனார்.

இந்நிலையில் பத்மினி கடைசியாக சிவாஜியை சந்தித்தது பற்றி எழுத்தாளர் அ முத்துலிங்கம் அவர்களிடம் தெரிவித்ததை அவர் தன்னுடையப் புத்தகத்தில் பகிர்ந்துள்ளார். அதில் “நான் சிவாஜியை கடைசியாக அவர் இறப்பதற்கு 2 ஆண்டுகளுக்கு முன்னர் சந்தித்தேன். அப்போது சிவாஜி கணேசன் உடல்நலம் நலிவடைந்திருந்தார். அவர் வீட்டு மாடியில்தான் இருப்பார். யாராவது அவரை பார்க்க வேண்டுமென்றால் மாடிக்குப் போய் சென்று பார்த்துவிட்டு போவார்களாம்.

நான் போன அன்று அவரை நாற்காலியில் உட்கார வைத்து உணவு மேடைக்கு அழைத்து வந்தார்கள். அங்கு எனக்குப் பிடித்த அத்தனை வகையான உணவுகளையும் வைத்திருந்தனர். ஆனால் அதில் ஒன்றைக் கூட சிவாஜியால் சாப்பிட முடியவில்லை. சிவாஜி மிகச்சிறந்த உணவுப்பிரியர். ஆனால் அப்போது அவர் உடல்நலத்தின் காரணமாக ஒரு நாளைக்கு ஒரு டம்ளர் தண்ணீருக்கு மேல் குடிக்க முடியாத அளவுக்கு நலிவடைந்திருந்தார். என்னைப் பார்த்து நல்லா சாப்பிடும்மா என்று சொல்லிவிட்டு சாப்பிடுவதைப் பார்த்துக் கொண்டிருந்தார்” எனக் கூறியுள்ளார்.

vinoth

Recent Posts

“கண்மாய் கரைக்கு வந்த எமன்”… போதையில் இருந்த கணவருக்கு மனைவி கொடுத்த ‘பயங்கர’ அதிர்ச்சி…. மறுநாள் காலை ஊரே அதிர்ந்த காட்சி…!

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை வெள்ளைக்கோட்டை பகுதியைச் சேர்ந்த பந்தல் தொழிலாளி சரவணப்பெருமாள் (47). இவரது மனைவி தில்லையம்மாள் (43) அப்பகுதியில்…

3 minutes ago

“கல்யாண வீட்டில் காதை பிளந்த டிஜே சத்தம்”… துடிதுடித்து பலியான 140 கோழிகள்… சுல்தான்பூரில் நடந்த வினோதக் கொடுமை…!

உத்தரப்பிரதேச மாநிலம் சுல்தான்பூர் மாவட்டத்தில், திருமண ஊர்வலத்தில் இசைக்கப்பட்ட அதீத டிஜே (DJ) சத்தம் காரணமாக 140 கோழிகள் உயிரிழந்த…

7 minutes ago

இன்னும் சில மணி நேரங்கள் தான்… எக்சிட் போல் முடிவுகளுக்கு நடுவே ஸ்டாலின் செய்த அந்த காரியம்…. மெரினாவில் நெகிழ்ச்சி காட்சி…!

தமிழகத்தின் 234 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் வாக்குப்பதிவு முடிந்து, ஒட்டுமொத்த மாநிலமும் இன்று (மே 4) நடைபெறவுள்ள வாக்கு எண்ணிக்கையை…

13 minutes ago

கோட்டையை பிடிக்கப்போவது யார்?… ஸ்டாலின், எடப்பாடி, விஜய், சீமான்…. சென்னையில் குவிந்த ‘பிக் 4’ தலைவர்கள்…!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் 2026-ன் வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெறவுள்ள நிலையில், மாநிலத்தின் பிரதான அரசியல் தலைவர்கள் அனைவரும் தற்போது…

18 minutes ago

12 மணிக்கு ரிசல்ட் வராது…. 2021-ஐ விட மோசமான நிலை… தூக்கத்தைத் தொலைத்த முன்னணி வேட்பாளர்கள்…. மாலை வரை திக் திக் நிமிடங்கள்….!

வழக்கமாக சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கையின்போது, மதியம் 12 மணிக்கெல்லாம் யார் ஆட்சி அமைப்பார்கள் என்பது குறித்த தெளிவான சித்திரம்…

25 minutes ago

தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார்?… 10,545 பணியாளர்கள், 3,324 மேஜைகள்… தமிழகத்தை தீர்மானிக்கும் அந்த 62 மையங்கள்…!

தமிழகத்தின் 17-ஆவது சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று விறுவிறுப்பாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த 23-ஆம் தேதி மாநிலம்…

30 minutes ago