தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத சக்தியாக விளங்கியவர் தான் நடிகர் எம் ஜி ஆர். நாடக நடிகராக இருந்து சினிமாவில் துணை நடிகராக அறிமுகமாகி அதன் பிறகு பல தடைகளை கடந்து நாயகனாக மாறியவர். ஒரு கட்டத்தில் தமிழ் சினிமாவில் முக்கிய முன்னணி நட்சத்திரமாக ஜொலித்தார். யார் தயாரிப்பாளராக இருந்தாலும் இந்த படம் தொடர்பான முடிவை தானே எடுக்கும் வல்லமையுடன் வளம் வந்தவர் எம்ஜிஆர். அதுமட்டுமல்லாமல் பல நடிகர்கள் மற்றும் பொதுமக்களுக்கு தன்னால் முடிந்த அளவுக்கு உதவிகளை செய்துள்ளார்.
படபிடிப்பு தளத்தில் அனைவருக்கும் சமமான உணவு வழங்க வேண்டும் என்ற நடைமுறையை கொண்டு வந்த எம்ஜிஆர் ஆனந்த ஜோதி என்ற படப்பிடிப்பில் இருந்தபோது ஒரு லைட் மேன் எதார்த்தமாக சொன்ன வார்த்தையால் அனைவருக்கும் வான்கோழி பிரியாணி விருந்து வழங்கியுள்ளார். 1963 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் ஆனந்த ஜோதி. எம்ஜிஆர் மற்றும் தேவிகா இணைந்து இந்த திரைப்படத்தில் நடித்திருந்த நிலையில் படபிடிப்பின் போது ஒருநாள் எம்ஜிஆர் மேக்கப் அறையில் இருந்தபோது லைட் மேன் ஒருவரிடம் மற்றொருவர் வந்து நல்லா சாப்டியா என்று கேட்க, அந்த லைட் மேன் இல்லை கேமராமேன் அழைத்ததால் பாதி சாப்பாட்டில் எழுந்து வந்து விட்டேன் என்று கூறியுள்ளார்.
இதனைக் கேட்ட அந்த நபர் சரி விடு மதியம் சேர்ந்து சாப்பிடலாம் என்று சொல்ல, ஆமாம் மதியம் என்ன வான்கோழி பிரியாணியா போடப் போறாங்க ஒரு கட்டு கட்ட என்று அந்த லைட் மேன் கேட்டுள்ளார். இதனை மேக்கப் அரையிலிருந்து கேட்டுக் கொண்டிருந்த எம்ஜிஆர் அன்று மதியம் அனைவருக்கும் வான்கோழி பிரியாணி விருந்து வைத்துள்ளார்.
ஆனால் அன்று வியாழக்கிழமை என்பதால் எம்ஜிஆர் சைவ சாப்பாடு சாப்பிட்டு உள்ளார். அப்போது அங்கு வந்த எம் ஜி ஆரின் உதவியாளர் அந்த லைட் மேன் சொன்னதுக்காக பிரியாணி விருந்து வச்சீங்க, அது நீங்க சாப்பிடற நாளா பார்த்து வச்சிருக்கலாமே என்று கூறினார். அதற்கு எம்ஜிஆர், ஒருவன் கேட்கும் போதே கொடுத்து விட வேண்டும் அதுதான் சிறப்பாக இருக்கும் என்று கூறி நெகிழ வைத்தார்.
திருமணமான பின்னரும் தனது முன்னாள் காதலனுடன் மனைவி உறவைத் தொடர்ந்த விவகாரத்தில், ஆத்திரமடைந்த கணவன் மனைவியின் அந்தரங்க உறுப்பில் மூன்று…
தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-ன் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்குத் தொடங்கவுள்ள நிலையில், ஒட்டுமொத்த மாநிலமும் ஒருவித…
கோடைக்கால வெப்பத்தைத் தணிக்க ஏசி (AC) இன்றியமையாததாகிவிட்ட நிலையில், அதன் செயல்திறனைத் தக்கவைக்க முறையான பராமரிப்பு மிகவும் அவசியம். ஏசியில்…
தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகி வரும் நிலையில், ஒட்டுமொத்த மாநிலத்தின் கவனமும் நட்சத்திர வேட்பாளரான நடிகர் விஜய்…
பிரயாக்ராஜ் அருகே உள்ள கவுந்தியாரு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கர்வா கலா கிராமத்தில் அனில் திவாரி என்பவர் தனது மனைவி…
மேற்கு வங்கத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்குத் தொடங்கியுள்ள நிலையில்,…