#image_title
அஸ்வினி நம்பியார் என்று அழைக்கப்படும் ருத்ரா தமிழ், மலையாளம், தெலுங்கு திரைப்படங்கள் மற்றும் தொடர்களில் நடித்த பிரபலமான நடிகை ஆவார். அஸ்வினி தனது பள்ளி இறுதியாண்டு படிக்கும்போது ஒரு மலையாள பத்திரிகைக்காக தனது வகுப்பு தோழிகளுடன் மாடலிங் பணிகளை செய்தார். அப்போது அந்த பத்திரிகையை பார்த்து இயக்குனர் பாரதிராஜா புது நெல்லு புது நாத்து திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு அளித்தார்.
பாரதிராஜா அவர்களின் மூலம் 1991 ஆம் ஆண்டு புது நெல்லு புது நாத்து என்ற தமிழ் திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமானார் அஸ்வினி. தொடர்ந்து தூரத்து சொந்தம், 1993 ஆம் ஆண்டு கிழக்குச் சீமையிலே திரைப்படத்தில் நடித்தார். இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.
கிழக்கு சீமையிலே திரைப்படத்தின் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து பிரபலமானார் அஸ்வினி. ஆத்தங்கர மரமே என்ற பாடல் இன்றளவும் பிரபலமான பாடலாக உள்ளது. தொடர்ந்து புதுப்பட்டி பொன்னுத்தாயி, முதல் பயணம், பெரிய தம்பி, கள்ளழகர், என்னவளே போன்ற திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் அஸ்வினி.
திருமணத்திற்கு பிறகு சிங்கப்பூரில் சென்று செட்டிலான அஸ்வினி சிங்கப்பூரில் எடுக்கப்படும் தொடர் மற்றும் குறும்படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் ஒரு நேர்காணியில் கலந்து கொண்ட அஸ்வினி தனது தமிழ் சினிமாவின் பயணத்தை பற்றி பகிர்ந்து கொண்ட போது தான் மிஸ் செய்த படங்களை பற்றி வருத்தமாக பேசி இருக்கிறார்.
அவர் கூறியது என்னவென்றால் தமிழில் ஒரு சில படங்களை நான் மிஸ் செய்து விட்டேன். அதற்காக பின்னர் வருத்தப்பட்டு இருக்கிறேன். அப்படி ஜென்டில்மேன் திரைப்படத்தில் இரண்டாவது கதாபாத்திரம் சுகந்தி கதாபாத்திரத்தில் நடிக்க என்னை கேட்டார்கள் நான் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். அதே திரைப்படத்தில் அந்த கதாபாத்திரம் வேண்டாம் என்று சொன்னபோதும் சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலே என்ற பாடல் வரும் அதில் கௌதமி மேம் டான்ஸ் ஆடி இருப்பாங்க. அந்த பாட்டுக்கும் என்னை டான்ஸ் ஆட கூப்பிட்டாங்க அதையும் நான் மிஸ் பண்ணிட்டேன். இந்த இரண்டையும் நினைத்து நான் ரொம்ப வருத்தப்பட்டு இருக்கிறேன் என்று ஓபனாக கூறியிருக்கிறார் அஸ்வினி.
திருமணமான பின்னரும் தனது முன்னாள் காதலனுடன் மனைவி உறவைத் தொடர்ந்த விவகாரத்தில், ஆத்திரமடைந்த கணவன் மனைவியின் அந்தரங்க உறுப்பில் மூன்று…
தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-ன் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்குத் தொடங்கவுள்ள நிலையில், ஒட்டுமொத்த மாநிலமும் ஒருவித…
கோடைக்கால வெப்பத்தைத் தணிக்க ஏசி (AC) இன்றியமையாததாகிவிட்ட நிலையில், அதன் செயல்திறனைத் தக்கவைக்க முறையான பராமரிப்பு மிகவும் அவசியம். ஏசியில்…
தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகி வரும் நிலையில், ஒட்டுமொத்த மாநிலத்தின் கவனமும் நட்சத்திர வேட்பாளரான நடிகர் விஜய்…
பிரயாக்ராஜ் அருகே உள்ள கவுந்தியாரு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கர்வா கலா கிராமத்தில் அனில் திவாரி என்பவர் தனது மனைவி…
மேற்கு வங்கத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்குத் தொடங்கியுள்ள நிலையில்,…