Categories: சினிமா

இறப்பதற்கு முன் பத்மினி கூறிய வார்த்தை… நினைத்து நினைத்து வருத்தப்பட்ட சரோஜாதேவி…

Spread the love

பழம்பெரும் மூத்த நடிகை சரோஜாதேவி கர்நாடகத்தை சேர்ந்தவர். இவரின் இயற்பெயர் ராதா தேவி என்பதாகும். இவர் தமிழ், தெலுங்கு மொழி திரைப்படங்களில் நடித்த பிரபலமான நடிகை ஆவார். ஐம்பதாண்டு காலமாக திரையுலகில் நடித்தவர் சரோஜாதேவி. 200 படங்களுக்கு மேல் நடித்துள்ள சரோஜா தேவியை கன்னடத்து பைங்கிளி, அபிநய சரஸ்வதி என்ற புனைப்பெயர்களால் மக்கள் அழைப்பர்.

தமிழ் திரையுலகில் 1960 70களில் புகழ்பெற்ற முன்னணி நடிகையாக இருந்த சரோஜாதேவி 17 வருடங்களாக தொடர்ந்து நாயகியாக நடித்து பிரபலமானவர். அந்த காலத்தில் சூப்பர் ஸ்டார்களை விடவும் நடிகர்களை விடவும் அதிக சம்பளம் வாங்கியவர் சரோஜாதேவி என்ற பெயரை பெற்றவர். எம்ஜிஆர் உடன் 26 படங்களிலும் சிவாஜிகணேசன் உடன் 22 படங்களிலும் நடித்துள்ளார் சரோஜாதேவி. இது தவிர ஜெமினி கணேசன், எஸ் எஸ் ராஜேந்திரன், முத்துராமன், ஏவிஎம் ராஜன், ரவிச்சந்திரன் ஆகிய பிரபல நடிகர்களுடன் நடித்துள்ளார்.

1960 70 காலகட்டத்தில் பத்மினி, சாவித்திரி, சரோஜாதேவி ஆகியோர் முப்பெரும் முன்னணி கதாநாயகிகளாக மூன்று பேரும் பெயர் பெற்றனர். தனது நளினமான நடை உடை பாவனைகளால் ஏராளமான ரசிகர்களை பெற்றவர் சரோஜாதேவி.

திருவனந்தபுரத்தில் பிறந்தவர் நடிகை பத்மினி. இவர் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை மற்றும் முறையாக பயிற்சி பெற்ற பரதநாட்டிய நடன கலைஞர் ஆவார். இவர் 250க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கு மற்றும் ரஷ்ய மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார் பத்மினி. இவரது மூத்த சகோதரி லலிதா இளைய சகோதரி ராகினி மற்றும் பத்மினி ஆகிய மூவரும் பரதநாட்டியத்தில் சிறந்து விளங்கியதால் திருவாரூர் சகோதரிகள் என்று அழைக்கப்பட்டனர். சினிமாவில் சிவாஜி கணேசன், எம்ஜிஆர், என்டி ராமராவ், ராஜ்கபூர், லட்சுமி கபூர், சத்யன், ராஜ்குமார், ஜெமினி கணேசன், எஸ் எஸ் ராஜேந்திரன் உட்பட பிரபலமான நடிகர்களுடன் நடித்தவர் பத்மினி.

சரோஜாதேவியும் பத்மினியும் நல்ல தோழிகளாகவே இருந்து வந்துள்ளனர். எந்த நேர்காணலில் கலந்து கொண்டாலும் சரோஜாதேவி பத்மினியை பற்றி பேசாமல் இருக்கவே மாட்டார். அப்படி பத்மினியுடன் இறுதி நிமிடங்களை பற்றி பகிர்ந்து கொண்டுள்ளார் சரோஜாதேவி.

சரோஜாதேவி கூறியது என்னவென்றால், நானும் பத்மினியும் நல்ல தோழிகள். அவரை எப்பவுமே நான் பப்பிமா என்று தான் கூப்பிடுவேன். அப்படித்தான் ஒரு தடவை கலைஞர் சினிமா நடிகர்களுக்காக ஒரு நிகழ்ச்சியை நடத்தினார். அப்போது அந்த நிகழ்ச்சிக்கு பப்பிமாவும் வந்திருந்தாங்க என் பக்கத்துல உக்காந்துதான் ரொம்ப நேரம் பேசிட்டு இருந்தாங்க. அப்புறம் கிளம்பும்போது என்னிடம் நான் போறேன் எனக்கு ரொம்ப உடம்பு முடியல அப்படின்னு சொல்லிட்டு பப்பிமா கிளம்புனாங்க.

நானும் என்னடா எப்பவுமே போயிட்டு வரேன் தானே பப்பிமா சொல்லுவாங்க இப்ப என்ன போறேன்னு சொல்றாங்கன்னு எனக்கு அப்பவே மனசு ஒரு மாதிரி பட்டுச்சு. அப்புறம் நிகழ்ச்சி முடிந்ததும் நான் பிளைட் ஏறி பெங்களூருக்கு வந்துட்டேன். பெங்களூர்ல வந்து இறங்குனதும் எனக்கு போன் வந்தது பத்மினி இறந்துட்டாங்கனு சொன்னாங்க. உடனே எனக்கு என்ன செய்யணும் தெரியல கையும் ஓடல காணும் உடல உடனே அடுத்த பிளைட் புடிச்சு சென்னைக்கு வந்துட்டேன். இருந்தாலும் அந்த நிகழ்ச்சியில கடைசியா பப்பிமா போறேன்னு சொன்ன வார்த்தை இன்னும் என் காதுல கேட்டுட்டே இருக்கு என்று வருத்தத்துடன் பேசி இருப்பார் சரோஜாதேவி.

admin

Recent Posts

சட்டத்தைக் கையில் எடுக்க நீங்க யார்?… பெண்கள் மீது கொடூரத் தாக்குதல்… வைரல் வீடியோவால் சிவசேனா… மகளிர் பிரிவினர் மீது வெடித்த சர்ச்சை…!

தானேவின் தலாவ் பாலி பகுதியில் பொது இடத்தில் பாலியல் தொழிலில் ஈடுபட்டதாகக் கூறி, சில பெண்களை சிவசேனா மகளிர் அணியினர்…

53 minutes ago

அதிர்ச்சி… நான் கலெக்டரா இருந்திருந்தா அங்கேயே என்கவுன்ட்டர்… அனல் பறக்கும் ஜெயக்குமாரின் பேட்டி… தமிழக அரசியலில் பரபரப்பு…!

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்திகள் அனுப்பி, இல்லம் சென்று தகராறு செய்ததாகத் தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மீது…

1 மணத்தியாலம் ago

அதிர்ச்சி… ஒரே நாளில் ரூ 5.35 லட்சம் கோடி அள்ளிய ஆந்திரா… தமிழகத்தின் வாய்ப்புகள் கைநழுவியதா?… டி.ஆர்.பி. ராஜா விளாசல்…!

ஆந்திரப் பிரதேசம் ஒரே நாளில் ரூ 5.35 லட்சம் கோடி மதிப்பிலான தொழில் முதலீட்டு ஒப்பந்தங்களை ஈர்த்துள்ளதாக முன்னாள் அமைச்சர்…

1 மணத்தியாலம் ago

திக்.. திக்..! “பாம்பா? எனக்கென்ன பயம்!”… 15 அடி மலைப்பாம்பை வெறும் கையால் அசால்ட்டாக தூக்கிய சிங்கப்பெண்… மிரண்டு போன பொதுமக்கள்…!!

உத்தரப்பிரதேச மாநிலம் மொராதாபாத்தைச் சேர்ந்த ஷாசியா பர்வீன், அச்சமற்ற 'பெண் பாம்பு பிடிப்பவராக' அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். சிறுவயது முதலே…

1 மணத்தியாலம் ago

அதிர்ச்சி… பைக் டாக்ஸி புக் செய்யும் பெண்கள் உஷார்… எல்லை மீறிய ரேபிடோ ஓட்டுநரின்… வக்கிரப் பேச்சை அம்பலப்படுத்திய இளம்பெண்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!

பெங்களூருவில் ரேபிடோ பைக் டாக்ஸி ஓட்டுநர் ஒருவர், பெண் பயணி ஒருவரிடம் தொலைபேசியில் பாலியல் ரீதியாக அத்துமீறிப் பேசிய சம்பவம்…

1 மணத்தியாலம் ago

அங்க தான் போனாங்க… சம்பளம் வாங்க சென்ற இடத்தில் மர்மம்… 7 வயது மகளுடன் மாயமான தாய்… தேடி தேடி ஓய்ந்து போன கணவர்… வலைவீசி தேடும் போலீஸ்…!!

ஹைதராபாத் நாகோல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜைபுரி காலனியில் வசித்து வருபவர் சம்பங்கி சுரேஷ். இவரது மனைவி சுகுணா மற்றும்…

2 மணத்தியாலங்கள் ago