ரஜினிகாந்த் நடித்த படையப்பா ரி ரிலீஸ் … ஒரு வாரத்தில் வசூல் இத்தனை கோடிகளா? – இந்த படத்தோட மொத்த பட்ஜெட் கேட்டு ஷாக் ஆன ரசிகர்கள்!

By Elango on மார்கழி 19, 2025

Spread the love

கடந்த 1999ம் ஆண்டில் வெளியாகி பெரிய வெற்றியை பெற்ற படம் படையப்பா. இந்த படத்தில் கதாநாயகனாக நடித்த ரஜினிகாந்த் இந்த படத்துக்கான ஸ்கிரிப்ட்டை அவரே எழுதி அவரை படத்தை சொந்தமாகவும் தயாரித்திருந்தார். அப்போதே இந்த படம் பல கோடி ரூபாய் வசூல் சாதனை செய்தது. இப்போது 26 ஆண்டுகளுக்கு பிறகு ரஜினி பிறந்த நாளில் கடந்த 12ம் தேதி படையப்பா படம் ரி ரிலீஸ் செய்யப்பட்டது.

தமிழ்நாட்டில் 300க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் படையப்பா ரி ரிலீஸ் செய்யப்பட்டது. பிறகு ரசிகர்களின் அமோக வரவேற்பு மற்றும் ஆதரவால் தியேட்டர்களின் எண்ணிக்கை பல ஊர்களில் அதிகரிக்கப்பட்டது. கடந்த 12ம் தேதி மறு வெளியீடு செய்யப்பட்ட படையப்பா ஒரு வாரத்தில் ரூ. 17 கோடி வசூலை கடந்திருப்பதாக பாக்ஸ் ஆபீஸ் தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் இந்த படத்தின் பட்ஜெட் வெறும் ரூ. 5 கோடிதான் என்பதும் குறிப்பிடத்தக்கது.