திடீரென திருமணத்தை முடித்த ‘பாவம் கணேசன்’ சீரியல் நடிகை… வைரலாகும் புகைப்படம்… வாழ்த்துக்கள் கூறும் ரசிகர்கள்…

By Begam on ஐப்பசி 28, 2023

Spread the love

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல தொடர்கள் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் பரபரப்பாக சென்று கொண்டு இருக்கிறது. அந்த வகையில் ஒளிபரப்பாகி நிறைவடைந்த சூப்பர் ஹிட் சீரியல்களில் ஒன்று பாவம் கணேசன். இந்த சீரியல் 2021ம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வந்தது. சில மாதங்களுக்கு முன்னர் நிறைவடைந்தது.

   

kpy புகழ் நவீன் இந்த தொடரில் நாயகனாக நடித்தார். பின் இந்த தொடரில் நேகா கவுடா, அனில் ஸ்ரீகுமார், ஷிமோனா ஜேம்ஸ், ஆனந்த் பாண்டி, ஷயமா ரெய்லடீன் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தனர். மேலும், இந்த சீரியல் தொடங்கியதிலிருந்தே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

   

 

இந்த சீரியலில் ஹீரோவின் தங்கையாக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை ஷிமோனா. இவருடைய கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்டது. தனது நடிப்பால் ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்தார் நடிகை ஷிமோனா.

பாவம் கணேசன் சீரியலுக்கு பின் நடிகை ஷிமோனா எந்த சீரியலிலும் நடிக்கவில்லை. தற்போது அவருக்கு கோயம்புத்தூரில் கிரண் என்பவருடன் நேற்று திருமணம் நடந்து முடிந்துள்ளது. இதுதொடர்பான புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்களும் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.