Categories: சினிமா

எனக்கும் MGR க்கும் 5000 ரூபாய்தான் சம்பளத்தில் வித்தியாசம்… ஆனால் அந்த வித்தியாசத்தில்தான் அவர் முதல்வர் ஆனார்… பிரபல நடிகர் பகிர்ந்த தகவல்!

Spread the love

தமிழ் சினிமாவில் மிரட்டலான வில்லனாக 50 கள் மற்றும் 60 களில் கோலோச்சியவர் பி எஸ் வீரப்பா. அவரின் கம்பீரமான சிரிப்பே ரசிகர்களைப் பயமுறித்தி அவர் மேல் வெறுப்பை வரவழைக்கும். எம் ஜி ஆர் மற்றும் சிவாஜியின் பல படங்களில் தொடர்ந்து வில்லனாக நடித்த அவரை பொது இடத்தில் மக்கள் பார்த்தால் கூட அவரை கரித்துக் கொட்டுவார்களாம்.

இவரை வில்லனாக பிரபலப்படுத்தியது இரண்டு படங்களில் அவர் பேசிய இரண்டு வசனங்கள். எம்.ஜி.ஆர் சாவித்திரி நடித்த மகாதேவி திரைப்படத்தில் ”மணந்தால் மகாதேவி இல்லையேல் மரண தேவி” என்று அவர் பேசிய வசனம் இன்றுவரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கிறது.

அதேபோல வஞ்சிக்கோட்டை வாலிபன் படத்தில் பத்மினி மற்றும் வைஜெயந்திமாலா இடையே நடன போட்டி நடக்கும் போது ”சபாஷ் சரியான போட்டி” என்ற வசனமும் வைரலான ஒன்று. இப்படி வில்லனாக மிரட்டிய இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்தன. இதனால் அவர் பொருளாதார ரீதியாகவும் நல்ல நிலைக்கு வந்தார். தொடர்ந்து எம் ஜி ஆர், இவரை தன் படங்களில் வில்லனாக நடிக்க வைத்தார். அதனால் ஒரு கட்டத்தில் எம் ஜி ஆர் படங்கள் என்றால் அதில் வில்லன் வீரப்பாதான் என்று ரசிகர்கள் தானாகவே முடிவு செய்துவிடுவார்கள்.

இதனால் அவரின் சம்பளமும் கிடுகிடுவென்று உயர்ந்தது. அதுபற்றி அவரே ஒருமுறை சிவகுமாரிடம் பகிர்ந்துகொண்டாராம். அதில் “எம் ஜி ஆருக்கு ஒரு லட்சம் சம்பளம் என்றால் எனக்கு 95000 ரூபாய் சம்பளம். எனக்கும் அவருக்கும் சம்பளத்தில் 5000 ரூபாய்தான் வித்தியாசம். ஆனால் அந்த 5000 க்கே மக்கள் அவரிடம் நாட்டையேக் கொடுத்துவிட்டார்கள். என்னை எல்லோரும் மறந்தே போய்விட்டார்கள். நான் படம் தயாரித்து நடுத்தெருவில் நின்றேன்.” எனக் கூறினாராம். இதை சிவகுமார் ஒரு நேர்காணலில் பகிர்ந்துள்ளார்.

vinoth

Recent Posts

அடியாத்தி…! என்ன இது…? ஒரே காரில் 16 பேர்…! டிக்கி வரை ஆட்களை அடைத்து அட்டூழியம்… அதிகாரிகளின் ஊழலை தோலுரித்த கார் ஓட்டுநர்… வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!!

உத்தராகண்ட் போன்ற மலைப் பகுதிகளில் போதிய அரசுப் பேருந்து வசதிகள் இல்லாததால், டெல்லி-என்சிஆர் வரை இயங்கும் தனியார் டேக்ஸிகளையே மக்கள்…

5 minutes ago

“என்னை தொந்தரவு பண்றாங்கம்மா…” ரயிலில் பயணித்த போதே போனில் அழுத இளம்பெண்…. பெற்றோருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி… வைரலாகும் வீடியோ…!!

அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள பி. பரூவா கல்லூரியில் படித்து வந்த ஹிமாஸ்ரீ போரா என்ற மாணவி, விசாகப்பட்டினத்தில் இருந்து…

19 minutes ago

எங்கள காப்பாத்துங்க…! அத்துமீறி நுழைந்த மர்ம கும்பல்… கர்ப்பிணி பெண்ணை தாக்கியதால் கருசிதைவு… எல்லாரையும் தாறுமாறாக தாக்கிய நபர்கள்… அச்சத்தில் இருக்கும் மக்கள்…!!

கோடா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நேற்று இரவு நிகழ்ந்த கொடூரத் தாக்குதல் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 20…

21 minutes ago

“வேலைக்குப் போ”சொன்னது ஒரு குத்தமா?…அண்ணன் – தம்பிக்குள் நடந்த வாக்குவாதம்… தம்பி செய்த கொடூர காரியம்… பரிதாபமாக பறிபோன உயிர்… கதறி அழும் குடும்பத்தினர்…!!

குஜராத்தின் டாங் மாவட்டத்தில், வேலையில்லாமல் இருந்த அண்ணனைத் தொழில் தொடங்குமாறு கூறிய தம்பி, வாக்குவாதம் முற்றி அவரை அடித்துக் கொன்ற…

30 minutes ago

பெண்களே இப்படியா?… “உங்களை நான் பார்த்துக் கொள்கிறேன்”… போலீசை மிரட்டிய பெண்… மதுபோதையில் தகராறு… சாலையில் பெரும் பரபரப்பு…!!

மதுபோதையில் நிலைகுலைந்த பெண் ஒருவர் நடுரோட்டில் கடுமையான ரகளையில் ஈடுபட்டு அப்பகுதியையே ஸ்தம்பிக்க வைத்தார். அவ்வழியே சென்ற பொதுமக்களை வலுக்கட்டாயமாகத்…

38 minutes ago