“வெளிய வாடா மானங்கெட்டவனே”… ஹோட்டல் அறையில் வேறொரு பெண்ணுடன் உல்லாசம்… மனைவியிடம் கையும் களவுமாக சிக்கிய கணவன்… அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்…!

By Nanthini on ஐப்பசி 28, 2025

Spread the love

உத்திரபிரதேச மாநிலத்தில் சமூக ஒழுக்கம் குறித்த விவாதங்களை எழுப்பும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. உத்தரபிரதேசம் மாநிலம் அம்ரோஹா மாவட்டத்தில் உள்ள பகுதியில் ஓயோ ஹோட்டல் ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த ஹோட்டல் அறையில் தனது கணவனை தாக்கும் பெண்ணின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. சமீபத்தில் நடந்த இந்த சம்பவம், கணவன் வேறு ஒரு பெண்ணுடன் இருப்பதாக தகவல் அறிந்த மனைவி உறவினருடன் ஹோட்டலுக்கு சென்று கதவின் முன்பு நின்று மோதலில் ஈடுபட்டுள்ள. அந்த வீடியோவில், கதவை பூட்டிக் கொண்டிருந்த கணவனை பார்த்த மனைவி, திறக்காவிட்டால் கதவை உடைத்து விடுவேன் என்று கூறி கூச்சலிடுகின்றார்.

சில நொடிகளில் கதவு திறக்கப்பட்டதும் செருப்பை கையில் எடுத்துக்கொண்டு நின்றிருந்த அந்தப் பெண் கணவனை கடுமையாக அடிக்க தொடங்கியதும் காட்சிகள் பதிவாகியுள்ளது. அந்த அறையில் பர்தா அணிந்த மற்றொரு பெண்ணும் இருந்துள்ளார். இந்த ஹோட்டல் பாஜக உள்ளூர் தலைவருக்கு சொந்தமானதாக கூறப்படுகிறது. இந்த வீடியோ தற்போது சமூக ஊடகத்தில் வேகமாக பரவி வந்தாலும் மனைவி போலீஸ் புகார் அளித்தாரா என்று எந்த தகவலும் வெளியாகவில்லை. சமூக ஊடகங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் வீடியோவாக வைரலாகி வருகிறது.