அடுத்தடுத்து அதிர்ச்சி..! “ஜனநாயகன்” படத்தை கேபிள் டிவியில் ஒளிபரப்பிய உரிமையாளர் அதிரடி கைது.. பெரும் பரபரப்பு..!!

By Soundarya on சித்திரை 14, 2026

Spread the love

நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம், திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் வேளையில், அதனை ஒரு உள்ளூர் கேபிள் தொலைக்காட்சி சட்டவிரோதமாக ஒளிபரப்பியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு உள்ளூர் சேனலில் இப்படம் முழுமையாக ஒளிபரப்பப்பட்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்த தமிழக வெற்றிக் கழகத்தினர் மற்றும் சினிமா ஆர்வலர்கள், உடனடியாக காவல் துறையிடம் புகார் அளித்தனர்.

இந்த புகாரின் அடிப்படையில் விரைந்து செயல்பட்ட சைபர் கிரைம் மற்றும் உள்ளூர் காவல் துறையினர், காப்புரிமை சட்டத்தை மீறி படத்தை ஒளிபரப்பிய அந்தத் தனியார் தொலைக்காட்சி அலுவலகத்தில் அதிரடி சோதனை நடத்தினர். இதனைத் தொடர்ந்து, சட்டவிரோதமாகத் திரைப்படத்தை ஒளிபரப்பிய குற்றத்திற்காக அந்தச் சேனலின் உரிமையாளரைக் காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், இணையதளங்களில் படத்தைப் பதிவேற்றிய மற்றும் லீக் செய்த விவகாரம் தொடர்பாக மாநிலம் முழுவதும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.