என் நாய் அப்படித்தான் கடிக்கும் நீ என்ன பண்ணுவ..? நாய் தாக்கிய பெண்ணை தாக்கிய உரிமையாளர்… இணையத்தில் வைரலாகும் பகீர் வீடியோ..!!

By Soundarya on கார்த்திகை 28, 2025

Spread the love

குஜராத்தின் ராஜ்கோட்டில் ஒரு பெண்ணை வளர்ப்பு நாய் தாக்கிய சம்பவம் சமீபத்தில் நடந்துள்ளது. கோத்தாரியா பகுதியில் உள்ள ரோலக்ஸ் சாலையில் உள்ள சுர்பி பாசிபிள் பிளாட்ஸில் இந்த சம்பவம் நடந்தது, இது முழுக்க முழுக்க சிசிடிவியில் பதிவாகியுள்ளது. அந்த காட்சிகளில், பாயல் கோஸ்வாமி என்ற பெண்ணுக்குச் சொந்தமான ஒரு செல்ல நாய், லிப்டுக்காகக் காத்திருந்த மற்றொரு குடியிருப்பாளரான கிரண் வகேலாவை நோக்கி ஆக்ரோஷமாகத் தாக்குவதைக் காட்டுகிறது.  

அப்போது அந்த பெண் செல்லப்பிராணியைக் கட்டுக்குள் வைத்திருக்குமாறு நாய் உரிமையாளரிடம் கூறுகிறார். ஆனால் , நாய் உரிமையாளர்   மன்னிப்பு கேட்பதற்குப் பதிலாக, அப்பெண்ணை கன்னத்தில் ஆராய்கிறார். இது இரு தரப்பினருக்கும் இடையே கடுமையான வாய்மொழி வாக்குவாதத்திற்கு வழிவகுக்கிறது. இந்த வீடியோ வைரலாகி வரும் நிலையில் பலரும் நாய் உரிமையாளரை திட்டி வருகிறார்கள்.