இந்தியாவில் தினம் தோறும் லட்சக்கணக்கான மக்கள் ரயிலில் பயணம் செய்கின்றனர். மற்ற போக்குவரத்துடன் ஒப்பிடும்போது ரயில் போக்குவரத்து என்பது மிகக் குறைந்த கட்டணத்திலும் சௌகரியமாகவும் இருப்பதால் பெரும்பாலானோர் ரயில் பயணத்தை விரும்புகிறார்கள். இப்படி தினம் தோறும் லட்சக்கணக்கான மக்கள் ரயிலில் பயணிப்பதால் மக்களின் வசதிக்கு ஏற்றவாறு இந்திய ரயில்வே அடிக்கடி புதிய சலுகைகளையும் அறிவிப்புகளையும் வெளியிட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக மூத்த குடிமக்களுக்கு சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது இந்திய ரயில்வே மூத்த குடிமக்களுக்கான சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளது.
அதன்படி ரயிலில் முன்பதிவு செய்யும்போது 60 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் மற்றும் 58 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் சீனியர் சிட்டிசன் விருப்பத்தை தேர்வு செய்து Lower Berth சீட்டை தேர்வு செய்து கொள்ளலாம். டிக்கெட் உறுதி செய்யப்பட்டால் கீழ் பெர்த் கிடைக்கும். ஒருவேளை கிடைக்கவில்லை என்றால் டிக்கெட் பரிசோதகர் அதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு சீனியர் சிட்டிசன்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
