தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. தமிழகத்தில் மீண்டும் எப்படியாவது ஆட்சியைப் பிடித்து விட வேண்டும் என்று திமுக தலைமை ஒரு பக்கம் சிந்தித்து கொண்டு இருக்க மறுப்பக்கம் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக ஆட்சியை மீண்டும் கொண்டு வருவதற்கான வேலைகளை செய்து வருகின்றார். இவர்களுக்கு இடையே தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய் புதிய ஆட்சியை மக்களுக்கு கொடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார். என்னதான் மற்ற கட்சிகள் போட்டி போட்டுக் கொண்டிருந்தாலும் திமுகவின் கூட்டணி என்பது பலமாக உள்ளது. அதனால் மீண்டும் திமுக ஆட்சி தான் அமையும் என்ற நம்பிக்கையில் முதல்வர் ஸ்டாலின் உள்ளார்.
இதனிடையே மற்ற கட்சிகளின் முக்கிய நிர்வாகிகளை திமுகவில் இணைக்கும் பணியை செந்தில் பாலாஜிக்கு முதல்வர் ஸ்டாலின் வழங்கியுள்ள நிலையில் அடுத்தடுத்து முக்கிய நிர்வாகிகளை கட்சியில் செந்தில் பாலாஜி இணைத்து வருகின்றார். அதன்படி அதிமுகவும் திமுகவும் மாற்றுக் கட்சியினரை இணைக்கும் பணியில் ஈடுபட்டு வர நேற்று 500க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்த நிலையில் இரவில் 300க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்துள்ளனர். அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் உட்பட பலர் செந்தில் பாலாஜி முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். கொங்கு மண்டலத்தில் அதிக இடங்களை கைப்பற்றும் நோக்கத்தில் இணைப்பு விழா நடைபெறுகிறது.
தமிழகத்தில் நடைபெற்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகம் (தவெக), ஆட்சியமைப்பதற்கான பெரும்பான்மைக்கு…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னையில் நடைபெற்று வரும் கட்சி எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தில், 6 முக்கியமான எம்.எல்.ஏ-க்கள் பங்கேற்கவில்லை…
தமிழக சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களைப் பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தமிழக வெற்றிக் கழகம், ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மைக்கு…
அமமுக சட்டமன்ற உறுப்பினர் காமராஜ், தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு அளித்ததாக வெளியான கடிதம் குறித்து டிடிவி தினகரன் கடும்…
தமிழக அரசியல் சூழலில் நடிகர் விஜய்க்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கப்படாததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தும், ஆட்சி அமைக்க…
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், ஆட்சி அமைப்பதற்காக ஆளுநரிடம் சமர்ப்பித்த ஆதரவு கடிதத்தில் தனது கட்சியின் எம்.எல்.ஏ கையெழுத்தைப்…