பாட்னா பீகாரை சேர்ந்த பிரபல ஆசிரியர்தான் கான். இவரை செல்லமாக கான் சார் என்று மாணவர்கள் அழைக்கிறார்கள். இவர் தனியார் கல்வி நிறுவனம் ஒன்று அமைத்து அதில் போட்டி தேர்வுக்காக பயிற்சி அளித்து வருகிறார். குறைந்த கட்டணத்தில் அதிக மாணவர்களுக்கு கல்வி சேவை அளித்துவருகிறார். இவரிடம் படித்த பல மாணவர்கள் தற்போது அரசு அதிகாரிகளாக உள்ளனர் . இதனிடையே வடமாநிலத்தில் உள்ள மூத்த சகோதர சகோதரிகளுக்கு ராக்கி கயிறு கட்டி அன்பை வெளிப்படுத்தும் ரக்ஷா பந்தன் பண்டிகை கொண்டாடப்பட்டது.
இதனைத்தொடர்ந்து, மாணவ சகோதரிகள் மத வேறுபாடு இன்றி சுமார் 15,000 க்கு மேற்பட்ட மாணவிகள் கான் சாருக்கு ராக்கி கட்டியுள்ளனர். மாணவிகளின் அன்பால் திக்கு முக்காடி பேச்சு வராமல் கான் சார் மகிழ்ச்சியில் உள்ளார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் இணைய தலைப்பில் வைரலாகி வருகிறது. இதைக்குறித்து கான் ஆசிரியர் உணர்ச்சிக்கரமான வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் மணிக்கட்டுகளில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராக்கிகள் கட்டப்பட்டுள்ளது. இதன் எடை காரணமாக என்னால் கையை கூட உயர்த்த முடியவில்லை என்று பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
