விவசாயிகளின் குறையை தீர்த்த முதல்வர் விஜய்… ₹317 கோடி நிலுவைத் தொகை “இரண்டே வாரத்தில்” கிடைக்க அதிரடி உத்தரவு..!!

By Soundarya on வைகாசி 12, 2026

Spread the love

தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள் பிரதிநிதிகள், இன்று (மே 12) தலைமைச் செயலகத்தில் தமிழக முதலமைச்சர் விஜய் அவர்களை நேரில் சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். இந்தச் சந்திப்பின் போது, மத்திய அரசிடம் இருந்து விவசாயிகளுக்கு வரவேண்டிய 317 கோடி ரூபாய் நிலுவைத் தொகையை விரைந்து பெற்றுத்தர நடவடிக்கை எடுக்குமாறு அவர்கள் முதலமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்தனர்.

விவசாயிகளின் கோரிக்கையை கனிவுடன் கேட்டறிந்த முதலமைச்சர் விஜய், இது தொடர்பாக உடனடியாகச் செயல்பட்டு, அடுத்த இரண்டு வாரங்களுக்குள் நிலுவைத் தொகையை விவசாயிகளுக்குப் பெற்றுத் தர வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கைக்கு முதலமைச்சர் உடனுக்குடன் தீர்வு காண உத்தரவிட்டுள்ளது விவசாய சங்கத்தினர் இடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.