இரவோடு இரவாக கூட்டணி முடிவை அறிவித்த அன்புமணி… வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!

Spread the love

தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால் பாமகவில் யார் கையில் அதிகாரம் உள்ளது என்று தெரியாத நிலைமை தான் தற்போது நீடிக்கிறது. தந்தை மகனின் சண்டை டெல்லி உயர்நீதிமன்றம் வரை சென்று அனைவருடைய கவனத்தையும் ஈர்த்தது. கட்சியின் நிறுவனரான ராமதாஸ் தன்னுடைய பேரன் முகுந்தனை இளைஞரணி தலைவர் பதவியில் அமர்த்தியதை விரும்பாத அன்புமணி அதனை மேடையிலேயே வெளிப்படுத்தினார்.

இதனைத் தொடர்ந்து பல பிரச்சனைகள் அரங்கேற தன்னுடைய மகள் காந்திமதியை கட்சியின் செயல் தலைவர் பதவியில் ராமதாஸ் அமர்த்தினார். இது அன்புமணிக்கு ராமதாஸ் உடனான மோதலை மேலும் அதிகப்படுத்தியது. இதனைத் தொடர்ந்து ராமதாஸ் அன்புமணியை தலைவர் பதவியில் இருந்து நீக்கினார். இதனை தேர்தல் ஆணையத்தில் முறையிட்ட அன்புமணிக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பை சட்டரீதியாக எதிர்கொள்ள ராமதாஸ் டெல்லி உயர் நீதிமன்றத்தில் முறையிட்டார்.

இதனை விசாரித்த நீதிமன்றம் பாமகவில் யார் தலைவர் என்பதில் குளறுபடிகள் இருப்பதால் தேர்தல் நேரத்தில் வேட்புமனுவில்  யார் கையெழுத்திடுவது என்ற பிரச்சனையும் வரும். இதனால் பாமகவின் மாம்பழம் சின்னம் முடக்கி வைக்கப்படுகிறது என தீர்ப்பு வழங்கியது. இப்படி இருக்கையில் பாமக யாருடன் கூட்டணி என்பதில் ஒரு தெளிவான முடிவு இல்லை. ராமதாஸ் திமுக பக்கமும் அன்புமணி அதிமுக பக்கமும் தன்னுடைய ஆதரவை தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில் திமுக ஆதரவாளர்களின் கட்டுப்பாட்டில் தைலாபுரம் உள்ளதாக அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் 2026 தேர்தலில் திமுக நிச்சயம் தோற்கடிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். NDA கூட்டணியில் பாமக இடம் பெறுமா என்பது குறித்து போக தெரியும் இன்றும் பாமகவின் கூட்டணி நிலைபாடு குறித்து இரண்டு வாரங்களில் தெரிவிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Nanthini

Recent Posts

எக்ஸ்பிரஸ்வேயில் கோர விபத்து… 2 பிள்ளைகளுடன் துடிதுடித்து இறந்த தம்பதி… நெஞ்சை உலுக்கும் பகீர் வீடியோ…!!

உத்திரப்பிரதேசத்தில் கங்கா எக்ஸ்பிரஸ்வேயில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த…

7 மணத்தியாலங்கள் ago

உங்களுக்கு மனசாட்சியே இல்லையா…? மறுப்பு சொன்ன பூ வியாபாரி பெண்… லத்தியால் சரமாரியாக தாக்கிய கும்பல்… நடுங்க வைக்கும் வீடியோ….!!

டெல்லியில் போதைப்பொருள் விற்க மறுத்த பூ வியாபாரி பெண்ணைக் கும்பல் ஒன்று லத்தியால் தாக்கியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிப்…

7 மணத்தியாலங்கள் ago

மின்னல் வேகத்தில் சென்ற வாகனம்…! 13 வயது சிறுமி துடிதுடித்து பலி… கதறும் குடும்பத்தினர்… வைரலாகும் திக் திக் வீடியோ…!!

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நேர்ந்த இருசக்கர வாகன விபத்தில் 13 வயது பரதநாட்டியக் கலைஞர் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த…

8 மணத்தியாலங்கள் ago

அரசு பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்…! மாதம் ரூ.1000 உதவித்தொகை பெற விண்ணப்பிப்பது எப்படி…? முழு விவரம் இதோ…!!

மத்திய அரசின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்விற்கு…

8 மணத்தியாலங்கள் ago

“பஞ்ச் டயலாக் பேசி காலத்தை ஓட்ட இது சினிமா அல்ல…” தீபாவளி பரிசு கொடுத்து வழியனுப்பி வைப்பதா…? முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்…!!

தவெக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் விடுத்த எச்சரிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், பஞ்ச் டயலாக் பேசி…

9 மணத்தியாலங்கள் ago

“முதல்வரே…! உங்க கட்சிக்காரர்களை கட்டி வையுங்கள்… இல்லை என்றால்…” தவெக அரசை கடுமையாக எச்சரித்த உதயநிதி ஸ்டாலின்…!!

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை ஆளுங்கட்சி தரப்பு…

9 மணத்தியாலங்கள் ago