Connect with us

ஒஸ்தி பட நடிகையா இது..? ஆள் அடையாளமே தெரியாம மாறிட்டாங்களே.. வைரலாகும் குடும்ப புகைப்படம்..!

CINEMA

ஒஸ்தி பட நடிகையா இது..? ஆள் அடையாளமே தெரியாம மாறிட்டாங்களே.. வைரலாகும் குடும்ப புகைப்படம்..!

 

தமிழ் சினிமாவில் 2 திரைப்படங்களில் நடித்தாலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற ரிச்சா காங்கோபாதியாய் தற்போது தனது கணவர் மற்றும் குழந்தையுடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. தமிழில் தனுஷ் நடிப்பில் வெளியான மயக்கம் என்ன திரைப்படத்தின் மூலமாக அறிமுகமாக ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றவர் ரிச்சா காங்கோபாதியாய்.

   

டெல்லியை சேர்ந்த மாடல் அழகியான இவர் பிறந்து வளர்ந்தது எல்லாம் அமெரிக்காவில், 2007 ஆம் ஆண்டு மிஷன் இந்தியாவின் அமெரிக்க அழகி போட்டியில் டைட்டில் வென்ற இவர் தெலுங்கில் வெளியான லீடர் என்கின்ற திரைப்படத்தின் மூலமாகத்தான் அறிமுகமானார். தமிழில் மயக்கம் என்ன அதை தொடர்ந்து சிம்பு நடிப்பில் வெளியான ஒஸ்தி உள்ளிட்ட இரண்டு திரைப்படங்களில் மட்டுமே இவர் நடித்திருக்கின்றார்.

தமிழில் பட வாய்ப்புகள் இல்லாததால் தெலுங்கில் ஒரு சில திரைப்படங்களில் நடித்த நிலையில் பின்னர் சினிமாவில் இருந்து கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக ஒதுங்கி இருக்கின்றார். படிப்பின் மீது இருந்த ஆர்வம் காரணமாக கடந்த 2013ஆம் ஆண்டு சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிட்டு எம்பிஏ படிப்பதற்காக அமெரிக்கா சென்றார்.

தொடர்ந்து தனது படிப்பை முடித்த ரிச்சா பிசினஸ் ஸ்கூல் ஒன்றில் பொறுப்பில் இருக்கின்றார். இந்நிலையில் அவர் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளிநாட்டைச் சேர்ந்த ஜோ என்பவரை திருமணம் செய்து கொண்டார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வந்தது. இவர்கள் இருவரும் இந்திய முறைப்படியும் கிறிஸ்துவ முறைப்படியும் மாறி மாறி திருமணம் செய்து கொண்டனர்.

இந்த திருமணத்தில் இரு வீட்டார் மற்றும் நெருங்கி நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். சினிமா துறையை சேர்ந்த ஒரு சிலர் மட்டுமே இவர்களின் திருமணத்தை கலந்து கொண்டனர். இதை தொடர்ந்து தற்போது அமெரிக்காவில் தனது கணவருடன் வாழ்ந்து வரும் ரிச்சா ஒரு குழந்தையை பெற்றிருக்கின்றார். அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை இணையத்தில் பகிர்ந்து இருக்கின்றார். இதை பார்த்த ரசிகர்கள் நம்ம ஒஸ்தி பட நடிகையா இது? என்று ஆச்சிரியத்துடன் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

author avatar
Mahalakshmi
Continue Reading
To Top