இரவோடு இரவாக “ஸ்டாலின்+எடப்பாடி” ஒரே நேரத்தில் போட்ட அதிரடி உத்தரவு… விஜய்க்கு காத்திருக்கும் அதிர்ச்சி…!!

By Soundarya on வைகாசி 7, 2026

Spread the love

தமிழகத்தின் இரு முக்கியக் கட்சிகளான திமுக மற்றும் அதிமுக ஆகிய இரண்டும் தங்களது சட்டமன்ற உறுப்பினர்களுடன் (MLA) தனித்தனியே அவசர ஆலோசனைக் கூட்டங்களை நடத்துவது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று மாலை நடைபெற்ற அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில், அடுத்த மூன்று நாட்களுக்கு அனைவரும் கட்டாயம் சென்னையில் இருக்க வேண்டும் என்று அக்கட்சித் தலைமை உத்தரவிட்டுள்ளது.

இதற்கிடையே, தமிழகத்தில் ஆட்சி அமைக்க ஆளுநர் இன்னும் அழைப்பு விடுக்காத சூழலில், திமுகவும் தனது சட்டமன்ற உறுப்பினர்களை ஆலோசனைக்காகச் சென்னைக்கு அழைத்துள்ளது. இரு கட்சிகளும் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் குறித்துத் தீவிரமாக ஆலோசித்து வருவதால், தமிழக அரசியலில் ஒருவிதப் பதற்றமான சூழல் நிலவுகிறது.