தமிழக மக்களே ரெடியா?… வீடு தேடி வருகிறது பொங்கல் பரிசு தொகுப்பு டோக்கன்… தமிழகம் முழுவதும் பரந்த அதிரடி உத்தரவு…!

Spread the love

தமிழகத்தில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு ஒவ்வொரு வருடமும் வழங்கப்பட்டு வரும் நிலையில் 2026 ஆம் ஆண்டுக்கான பொங்கல் பரிசு குறித்து அறிவிப்பு இதுவரை வெளியிடப்படாமல் உள்ளது. இதனிடையே கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் நந்தகுமார் அனைத்து மண்டல இணை பதிவாளர்களுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில், ரேஷன் கடைகள் மூலமாக பொங்கல் பரிசு தொகுப்பு ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்குவது தொடர்பான முன்னேற்பாடுகளை மேற்கொள்ளவும், டோக்கன் விநியோகம் குறித்தும் பின்வரும் அறிவுரைகளை பின்பற்றி இந்த திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த வேண்டும்.

மண்டலங்களில் செயல்படும் ரேஷன் கடைகளுடன் இணைக்கப்பட்டுள்ள குடும்ப அட்டைகளுக்கு ஏற்ப ஜனவரி 2 ஆம் தேதிக்குள் டோக்கன் அச்சிடப்பட்டு விநியோகம் செய்ய ஏதுவாக தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். பொங்கல் பரிசு தொகுப்பு பெறவேண்டிய நாள் மற்றும் நேரம் குறிப்பிட்ட டோக்கன்களை விற்பனையாளர்கள் ரேஷன் அட்டைதாரர்களின் இல்லங்களுக்கு சென்று வழங்க வேண்டும். முதல் நாள் முற்பகல் 100 ரேஷன் அட்டைதாரர்களுக்கும், பிற்பகல் 100 ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் செய்ய எதுவாக டோக்கன்கள் வழங்க வேண்டும்.

சட்டம் ஒழுங்கு பிரச்சனை எழக்கூடிய ரேஷன் கடைகள், அதிக கூட்டம் ஏற்படக்கூடிய ரேஷன் கடைகள் போன்ற கடைகளின் பட்டியல்கள் முன்கூட்டியே தயார் செய்யப்பட்டு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அல்லது காவல்துறை ஆணையாளருக்கு வழங்கப்பட்டு போதிய போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பொங்கல் பரிசு தொகுப்பு டோக்கன் விரைவில் விநியோகம் செய்யப்பட உள்ளது உறுதியாகி உள்ளது.

Nanthini

Recent Posts

ஆதார் வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. ஜூன் 14-க்குள் இதைச் செய்யாவிட்டால் கட்டணம் வசூலிக்கப்படும்..!!

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI), ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்களின் அடையாள மற்றும் முகவரிச்…

5 மணத்தியாலங்கள் ago

“உலகத்தைச் சீரழிக்கும் கொடுங்கோலர்கள்” வளங்களைச் சுரண்டி ஆயுதங்களில் முதலீடு… டொனால்ட் ட்ரம்பை மறைமுகமாகச் சாடிய போப்..!!

உலக நாடுகளின் இயற்கை வளங்களைச் சுரண்டி, அந்தப் பணத்தை மக்கள் நலனுக்குப் பயன்படுத்தாமல் ஆயுதங்களில் முதலீடு செய்யும் உலகத் தலைவர்களைப்…

5 மணத்தியாலங்கள் ago

“பிளான் பி” தயாரா…? எடப்பாடி தொகுதியில் விஜய்யின் அடுத்த மூவ் என்ன…? கலக்கத்தில் அதிமுக…!!

சேலம் மாவட்டத்தின் நட்சத்திரத் தொகுதியான எடப்பாடியில், வரும் ஏப்ரல் 23 சட்டமன்றத் தேர்தலில் சுமார் 61,000 இளம் வாக்காளர்கள் வெற்றியாளரைத்…

7 மணத்தியாலங்கள் ago

ஐஐஐடி படிப்பு.. ஆண்டுக்கு 17 லட்சம் சம்பளம்…. ஆனாலும் வேலையை விட்டது ஏன்….? வைரலாகும் இளைஞரின் உருக்கமான பதிவு…!!

டெல்லி ஐஐஐடியில் பட்டம் பெற்ற 24 வயது இளைஞர் சிராஜ் மதன், ஆண்டுக்கு 17 லட்சம் ரூபாய் ஊதியம் தரும்…

7 மணத்தியாலங்கள் ago

இன்னும் ஒரு வாரம் தான் டைம்…. எனக்காக இதைச் செய்யுங்க…! பெண்களுக்கு விஜய் விடுத்த ‘விசில்’ கோரிக்கை…!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான விரிவான தேர்தல் அறிக்கையை இன்று சென்னையில் வெளியிட்டார். திருக்குறளின்…

7 மணத்தியாலங்கள் ago

“தீட்டு” – உயிரை விட மேலானதா?… என் அம்மாவிற்கு நேர்ந்தது இன்று அந்தப் பெண்ணிற்கு மரணம்… சமூகத்தின் கண்களைத் திறக்கப்போகும் ஒரு பதிவு…!!!

மிகவும் கனமான மற்றும் வேதனையான ஒரு விஷயத்தைப் பகிர்ந்துள்ளீர்கள். ஒரு பூஜை  வழிபாட்டிற்காகத் தனது ஆரோக்கியத்தைப் பணையம் வைத்து, 18…

7 மணத்தியாலங்கள் ago