உத்தரப்பிரதேச மாநிலம் பாக்பத் மாவட்டத்தின் டோகாட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், “சிகரெட் பாபா” என்று அழைக்கப்படும் ஒருவரின் செயல்பாடு தற்போது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. சுரேந்திரா (எ) ஷௌகீன் என்ற பெயருடைய இந்த நபர், ஒரு ஆண்டுக்கு முன்பு வரை சாலையோரம் வேர்க்கடலை விற்று வந்துள்ளார். தற்போது திடீரென ‘பாபா’ அவதாரம் எடுத்துள்ள அவர், மருத்துவம் அல்லது மருந்துகள் ஏதுமின்றி, வெறும் சிகரெட் புகையை ஊதி நோய்களைக் குணப்படுத்துவதாகக் கூறி வருகிறார். தலைவலி, காய்ச்சல் முதல் குடும்பத் தகராறுகள் மற்றும் செய்வினை கோளாறுகள் வரை அனைத்திற்கும் சிகரெட் புகையே தீர்வு என அவர் நம்பவைக்கிறார்.
டெல்லி, ஹரியானா போன்ற அண்டை மாநிலங்களில் இருந்தும் ஏராளமான மக்கள் இவரிடம் சிகிச்சைக்கு வருகின்றனர். ஒரு தரப்பினர் இதனை ‘அதிசயம்’ என்று கூறினாலும், சமூக ஆர்வலர்கள் இது அப்பட்டமான மூடநம்பிக்கை மற்றும் ஏழை மக்களை ஏமாற்றிப் பணம் பறிக்கும் செயல் என்று குற்றம் சாட்டுகின்றனர். சுகாதாரத்திற்கு ஊறுவிளைவிக்கும் சிகரெட் புகையைச் சிகிச்சையாகப் பயன்படுத்துவது சட்டவிரோதமானது எனப் புகார்கள் எழுந்துள்ளன. இது போன்ற போலி மருத்துவங்கள் மற்றும் மூடநம்பிக்கைகள் குறித்து விழிப்புணர்வுடன் இருக்கவும், உடல்நலக் கோளாறுகளுக்கு முறையான மருத்துவர்களை அணுகவும் பொது சுகாதாரத் துறை கேட்டுக்கொண்டுள்ளது.
சோஹ்ரத்கர் நகரின் 11-வது வார்டுக்கு உட்பட்ட ரகுநாத்நகர் பகுதியில், காஜல் என்ற பெண்ணும் அவரது 18 மாத மகன் டைகரும்…
செயற்கை நுண்ணறிவு சிப் தயாரிப்பில் முன்னணியில் உள்ள என்விடியா நிறுவனத்தை 30 ஆண்டுகளுக்கும் மேலாக வழிநடத்தி உச்சத்திற்குக் கொண்டு சென்ற…
கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டத்தில் உள்ள பண்டிகவுடனபாள்யா கிராமத்தைச் சேர்ந்த சிக்கமரியப்பா மற்றும் அவரது மனைவி நரசம்மா ஆகியோர், திங்கள்கிழமை…
இந்தியாவில் திருமணம் செய்துகொண்டு வெளிநாட்டில் பெறும் விவாகரத்துத் தீர்ப்புகள் இந்தியாவில் தானாகவே செல்லுபடியாகாது என்று உச்ச நீதிமன்றம் முக்கியத் தீர்ப்பு…
உலகளாவிய சந்தையில் ஏற்பட்டுள்ள தொடர் சரிவின் எதிரொலியாக, உள்நாட்டிலும் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த நான்கு தினங்களில் சவரனுக்குச் சுமார்…
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகேயுள்ள கருப்பூர் கிராமத்தைச் சேர்ந்த 36 வயதான துரைமுருகன், மலேசியாவில் கடந்த இரண்டரை ஆண்டுகளாகத் தனியார்…