பள்ளிகள் திறப்பு… தமிழகம் முழுவதும் அரசு புதிய அதிரடி உத்தரவு…!

By Nanthini on மார்கழி 28, 2025

Spread the love

தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு கடந்த டிசம்பர் 10ஆம் தேதி அரையாண்டு தேர்வு தொடங்கியது. அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் கடந்த டிசம்பர் 23ஆம் தேதி தேர்வு முடிவடைந்த நிலையில் டிசம்பர் 24 முதல் அரையாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டது. ஜனவரி நான்கு வரை மொத்தம் 12 நாட்கள் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் அரையாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஜனவரி 5ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.

இந்நிலையில் விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படும் முதல் நாளே மூன்றாம் பருவ புத்தகங்களை மாணவர்களுக்கு வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. பாடநூல் கழகத்திலிருந்து அனைத்து மாவட்டங்களுக்கும் புத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அனைத்து பள்ளி வாரியாக பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் ஒவ்வொரு பள்ளிக்கும் எத்தனை புத்தகங்கள் வந்திருக்கிறது என எமிஸ் இணையதளத்தில் உடனே அப்டேட் செய்யவும் பள்ளி முதல்வர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.