வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வானது இன்று காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது. இது நாளை புயலாக உருவாகும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதனையடுத்து நாளை புயல் உருவாக வாய்ப்புள்ள நிலையில், நவ.28,29,30 ஆகிய தேதிகளில் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
நவ.28 ஆம் தேதி திருவாரூர், நாகை, தஞ்சை மாவட்டங்களிலும், 29 ஆம் தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சி, செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், புதுக்கோட்டை, நாகை, தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்டும் விடுக்கப்பட்டதால், பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது.
