அரசியலில் திடீர் திருப்பம்… மீண்டும் ஒன்று சேர்ந்த ஓபிஎஸ், டிடிவி தினகரன்… செம ஷாக்கில் இபிஎஸ்…!

By Nanthini on புரட்டாதி 27, 2025

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அதேசமயம் கூட்டணி குறித்த பேச்சு வார்த்தையும் மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது. இதனிடையே அதிமுக பாஜகவுடன் கூட்டணி அமைத்து சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள உள்ள நிலையில் இபிஎஸ் மீது கட்சியை நிர்வாகிகள் பலரும் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

அதன்படி சமீபத்தில் செங்கோட்டையன் பிரிந்து கிடக்கும் அதிமுகவினர் அனைவரும் மீண்டும் ஒன்றிணைைய வேண்டும் என கூறி இருந்ததால் அவரை கட்சியிலிருந்து நீக்கி இபிஎஸ் உத்தரவிட்டார். இது ஒரு பக்கம் இருக்க மறுப்பக்கம் டிடிவி தினகரன் மற்றும் ஓபிஎஸ் ஆகியோர் NDA கூட்டணியில் இருந்து விலகியது மட்டுமல்லாமல் இபிஎஸ் முதல்வர் வேட்பாளராக இருக்கும் வரை கூட்டணியில் இணைய மாட்டோம் என்று கூறி வருகிறார்கள். இதனால் டிடிவி தினகரன் மற்றும் ஓபிஎஸ் விவகாரத்தில் பாஜக மற்றும் அதிமுக இடையே உரசல் ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டது.

   

இதனிடையே ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் இருவரும் நீண்ட காலங்களுக்குப் பிறகு சந்தித்து பேசியது அரசியலில் பேசு பொருளாகியுள்ளது. சென்னை நந்தனத்தில் வி ஐ டி பல்கலைக்கழகம் குடும்பத்தின் திருமண விழாவில் பங்கேற்ற இருவரும் ஒரே சோபாவில் அமர்ந்து சுமார் பத்து நிமிடங்களுக்கு மேலாக ஆலோசனை நடத்தினர். NDA கூட்டணியில் இருந்து இருவரும் விலகிய பிறகு மீண்டும் கூட்டணிக்குள் இணைய பாஜக அழைப்பு விடுத்துள்ள நிலையில் இந்த சந்திப்பு கவனத்தை ஈர்த்துள்ளது.