தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அதேசமயம் கூட்டணி குறித்த பேச்சு வார்த்தையும் மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது. இதனிடையே அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டை என் கழக அமைப்பு செயலாளர் மற்றும் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுவதாக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று அறிவித்திருந்தார். இது அதிமுகவில் புதிய புயலைக் கிளப்பி உள்ளது.
இந்நிலையில் அதிமுகவை ஒருங்கிணைக்க செங்கோட்டையன் எடுக்கும் முயற்சிக்கு முழு ஆதரவு அளிப்பதாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். செங்கோட்டையனை உறுதியாக சந்தித்து பேசுவேன் எனவும் கூறியுள்ளார். இவரைத் தொடர்ந்து சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன், எடப்பாடி பழனிச்சாமியை தவிர வேறு யார் மீதும் எனக்கு வருத்தம் இல்லை. துரோகம் இழைத்தவர் எடப்பாடி பழனிச்சாமி. அவரை ஏற்கவே முடியாது.
செங்கோட்டையனை ஃபோனில் தொடர்பு கொண்டு பேசினேன். விரைவில் செங்கோட்டையனை உறுதியாக சந்திப்பேன். அவருக்கு எப்போதும் என் ஆதரவே இருக்கும் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் செங்கோட்டை எனக்கு ஆதரவு தெரிவித்துள்ளது இபிஎஸ்-க்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. ஏற்கனவே இவர்கள் அனைவரும் பிரிந்து கிடக்கும் நிலையில், தற்போது செங்கோட்டையனும் இவர்களுடன் இணைந்து எதிராக திரும்பினால் புதிய கூட்டணி உருவாகி இபிஸ்க்கு அது பெரிய சிக்கலாக அமையும் எனக் கூறப்படுகிறது.
