ஓபிஎஸ் கோட்டை காலி… அதிமுகவில் கூண்டோடு ஐக்கியம்…. செம குஷியில் துள்ளும் எடப்பாடி….!

By Nanthini on பங்குனி 7, 2026

Spread the love

தேனி மாவட்ட அரசியல் களத்தில் பெரும் திருப்பமாக, ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட நிர்வாகிகள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜக்கையன் மற்றும் ராமன் தலைமையில், சேலம் சூரமங்கலத்தில் உள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் இல்லத்திற்கு நேரில் சென்று தங்களை அதிமுகவில் இணைத்துக்கொண்டனர்.

தேனி, போடி, கம்பம் மற்றும் பெரியகுளம் ஆகிய முக்கியப் பகுதிகளில் இருந்து வந்திருந்த இந்த நிர்வாகிகளுக்கு, பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் பொன்னாடை போர்த்தி உற்சாகமாக வரவேற்று வாழ்த்துகளைத் தெரிவித்தார். ஓபிஎஸ் அணியிலிருந்து இவ்வளவு பெரிய அளவிலான நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவில் இணைந்திருப்பது, தேனி மாவட்டத்தில் அக்கட்சியின் பலத்தை அதிகரிப்பதோடு, வரும் காலங்களில் எடப்பாடி பழனிசாமியின் கரங்களை மேலும் வலுப்படுத்தும் ஒரு முக்கிய நகர்வாக அரசியல் நோக்கர்களால் பார்க்கப்படுகிறது.