BREAKING: அதிமுகவில் இருந்து நீக்கம்… சற்றுமுன் இபிஎஸ் அதிரடி…!!

By Soundarya on ஐப்பசி 30, 2025

Spread the love

பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு கூட்டாக சேர்ந்து மரியாதை செலுத்திய ஓபிஎஸ், செங்கோட்டையன், டிடிவி தினகரன் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்கள். எடப்பாடியை வீழ்த்தும் வரை ஓய மாட்டோம். காலதாமதம் காரணமாக சசிகலாவால் எங்களோடு இணைந்து இன்று வர முடியவில்லை. அவர் எங்களுடன் என்றும் உறுதுணையாக இருப்பார். மேலும் எடப்பாடி தான் எண்களின் ஒரே எதிரி என்று கூறியிருந்தார்கள். இந்நிலையில் OPS, செங்கோட்டையன், டிடிவி ஆகியோரின் சந்திப்பு திட்டமிட்டது என EPS கூறியுள்ளார்.

அவர்கள் திமுகவின் B டீம் . செங்கோட்டையனை கட்சியில் இருந்து நீக்குவதில் எந்த தயக்கமும் இல்லை என்றார். அதிமுகவில் இருந்த சில துரோகிகளால் தான் 2021 தேர்தலில் மீண்டும் ஆட்சியை அமைக்க முடியவில்லை. அந்தியூரில் அதிமுகவின் தோல்விக்கு செங்கோட்டையனும் ஒரு காரணம் என்று கடுமையாக சாடினார்.