அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தற்போது திமுகவுடன் இணக்கமான போக்கை கடைபிடித்து வரும் நிலையில், அவரது தீவிர ஆதரவாளர்கள் அடுத்தடுத்து எடப்பாடி பழனிசாமி தலைமையில் மீண்டும் அதிமுகவில் இணைந்து வருவது ஓபிஎஸ் தரப்பிற்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.
குறிப்பாக, ஓபிஎஸ்-ஸின் வலதுகரமாகத் திகழ்ந்த முன்னாள் எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ-வான வெ. ஏழுமலை அதிமுகவில் இணைந்ததைத் தொடர்ந்து, தற்போதைய எம்.பி. பாலாஜி, முன்னாள் அமைச்சர் டி.ராமசாமியின் மகன் டி.ஆர்.சீனிவாசன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் ராமநாதபுரம் மற்றும் தேனி மாவட்டங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான ஆதரவாளர்களுடன் ஈபிஎஸ்-ஐ சந்தித்து கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர். சொந்த கோட்டையான தேனியிலேயே செல்வாக்கு சரிந்து வருவதாலும், முக்கிய தளபதிகள் எடப்பாடி பழனிசாமி பக்கம் அணிவகுப்பதாலும் ஓபிஎஸ் அரசியல் ரீதியாக கடும் அதிர்ச்சியில் உறைந்துள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே நிகழ்ந்த கோர விபத்தில் இரண்டு லாரி ஓட்டுநர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர்.…
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், வேற்றுகிரகவாசிகள் (Aliens) மற்றும் அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்கள் (UFO) குறித்த ரகசிய ஆவணங்களை…
திருப்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றிய தருணத்தைக் காட்டுகிறது. மத்தியில் ஆளும் பாஜக அரசு கொண்டு வந்த…
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் டெல்லி-மும்பை எக்ஸ்பிரஸ்வேயில் நடந்த கோர விபத்து, ஒரு குடும்பத்தையே சிதைத்துள்ளது. இந்த…
சமூக வலைதளங்களில் ஒரு இளம்பெண் உணவகத்தில் உள்ள 'மெனு' (Menu) கார்டுக்கு ஒரு விசித்திரமான மற்றும் நகைச்சுவையான விளக்கத்தைக் கொடுக்கும்…
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் தாயே தனது 4 வயதுப் பெண் குழந்தையை கழுத்தை நெரித்துக் கொன்ற…