ஓபிஎஸ்-க்கு அடுத்த ஷாக்…மொத்தமாக தட்டி தூக்கிய இபிஎஸ்…. ராமநாதபுரத்தில் அரங்கேறிய மெகா ட்விஸ்ட்…!

By Nanthini on மாசி 5, 2026

Spread the love

ஓபிஎஸ் தலைமையிலான அணியிலிருந்து நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகி வருவது அந்த அணியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபகாலமாக ஓபிஎஸ் தரப்பிலிருந்து முக்கிய நிர்வாகிகள் மற்றும் மாவட்ட அளவிலான பொறுப்பாளர்கள் மாற்றுக் கட்சிகளிலும், குறிப்பாக எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவிலும் இணைந்து வருகின்றனர். இந்த அரசியல் நகர்வுகள் அதிமுகவில் ஒற்றைத் தலைமை உருவான பிறகு இபிஎஸ் கரம் வலுவடைந்து வருவதையே காட்டுகின்றன.

இதன் தொடர்ச்சியாக, இன்று இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஓபிஎஸ் அணி நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். ராமநாதபுரம் மாவட்ட மகளிர் அணி செயலாளர் சபினா பேகம் ராஜ்கபூர், நகரச் செயலாளர் ரோஜா முருகேசன், மாவட்ட ஐடி விங் துணைச் செயலாளர் ராஜ்குமார், ஐடி விங் ஒன்றிய செயலாளர் சிவா மற்றும் ஒன்றிய அவைத்தலைவர் செல்வராஜ் உள்ளிட்ட பலர் ஓபிஎஸ் அணியிலிருந்து விலகி மீண்டும் தாய்க்கழகமான அதிமுகவில் இணைந்தனர். இந்த அணிமாற்றம் ராமநாதபுரம் மாவட்ட ஓபிஎஸ் அணியினருக்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.