ஓ.பி.எஸ். அவர்கள் திமுகவில் இணைந்ததாக வெளியான தகவல்களால் அதிருப்தியடைந்த அவரது ஆதரவாளர்கள், தற்போது மீண்டும் அதிமுகவில் இணைந்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, டெல்டா மாவட்டத்தைச் சேர்ந்த ஓ.பி.எஸ். அணியின் முக்கிய நிர்வாகிகளான 2021-ஆம் ஆண்டு திருவிடைமருதூர் தொகுதி வேட்பாளர் யூனியன் வீரமணி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் மீண்டும் தங்களை அக்கட்சியில் இணைத்துக் கொண்டனர்.
தங்களை மீண்டும் தாய் கழகத்தில் இணைத்துக் கொண்ட நிர்வாகிகளை இன்முகத்துடன் வரவேற்ற இ.பி.எஸ்., எதிர்வரும் தேர்தல் பணிகளில் தொய்வின்றி, மிகச் சிறப்பாகச் செயல்படுமாறு அவர்களுக்கு அறிவுறுத்தினார்.
